ADVERTISEMENT

முஸ்லிம் கைதிகளின் விடுதலை குறித்து பீட்டர் அல்போன்ஸை சந்தித்த தமிமுன் அன்சாரி..!

12:10 PM Aug 11, 2021 | tarivazhagan

ADVERTISEMENT

ADVERTISEMENT

தமிழ்நாடு அரசின் சிறுபான்மையினர் ஆணைய தலைவர் பீட்டர் அல்போன்ஸை மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளர் மு. தமிமுன் அன்சாரி தலைமையில், கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் மெளலா. நாசர், இணைப் பொதுச் செயலாளர் JS. ரிபாயி, மாநிலச் செயலாளர் நாச்சிக்குளம் தாஜ்தீன் ஆகியோர் சந்தித்தனர்.

அப்போது தமிழ்நாட்டு சிறைகளில் சமூக வழக்குகளில் கைதாகி 20 வருடங்களுக்கும் மேலாக வாடிவரும் முஸ்லிம் கைதிகளின் முன் விடுதலை மற்றும் அவர்களின் மனித உரிமைகள் குறித்த மனு ஒன்றையும் தமிமுன் அன்சாரி பீட்டர் அல்போன்ஸிடம் அளித்து அதனைப் பற்றி விளக்கிக் கூறினார்.

மேலும், அவர்களின் குடும்பங்கள் வறுமையில் வாடுவதால், அவர்கள் தொழில் தொடங்கவும், வருமானம் ஈட்டவும் ஆணையம் சார்பில் உரிய முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் இச்சந்திப்பில் வலியுறுத்தப்பட்டது. சென்னை IITயில் ஈராண்டுகளுக்கு முன்பு தற்கொலை செய்துகொண்ட கேரள மாணவி ஃபாத்திமாவின் மர்ம மரணம் குறித்தும், அங்கு காட்டப்படும் சாதிய - மதவாத பாகுபாடுகள் குறித்தும் விசாரிக்க மற்றொரு மனுவும் மஜக சார்பில் கொடுக்கப்பட்டது. இச்சந்திப்பில் மத, மொழி சிறுபான்மையினர் சந்திக்கும் பல பிரச்சனைகளும் விவாதிக்கப்பட்டன.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT