ADVERTISEMENT

சாதி, மத பேதமின்றி போராட்டங்களில் மக்கள் பங்கேற்கிறார்கள்... தமிமுன் அன்சாரி 

03:58 PM Dec 20, 2019 | rajavel

ADVERTISEMENT

திருச்சி காந்தி மார்க்கெட் காதர் மஸ்ஜிதில் மஜக பொதுச் செயலாளரும், நாகை எம்எல்ஏவுமான மு.தமிமுன் அன்சாரி உரையாற்றினார்.

ADVERTISEMENT


அப்போது, பூட்டானிலும், நேபாளத்திலும் ஒடுக்கப்படும் சிறுபான்மையினருக்கும், இலங்கையில் ஒடுக்கப்படும் தமிழர்களுக்கும் புதிய குடியுரிமை சட்டத்தில் வாய்ப்பு மறுக்கப்படுவது நியாயமா? அண்டை நாடுகளிலிருந்து அகதிகளாக இந்தியாவுக்கு வரும் இந்திய வம்சாவளி முஸ்லிம்களுக்கு இதில் பாராபட்சத்துடன் அநீதி இழைக்கப்படுகிறது என்றார்.


மேலும், நடைபெறும் போராட்டங்களை மக்கள் நடத்தும் கிளர்ச்சி என்று வர்ணித்தவர், இதில் அரசு படைகளின் சார்பில் தான் வன்முறைகள் திட்டமிட்டு திணிக்கப்படுகிறது. அதற்கு ஜாமியா மில்லியா மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலும், மங்களுர் போலிஸ் அராஜகங்களும் உதாரணங்கள்.



இந்த போராட்டம் வெற்றிப்பெற வேண்டுமெனில் முழு அமைதியுடன் வழிநடத்தப்பட வேண்டும் என்றே நாங்கள் அனைவரும் அக்கறை காட்டுகிறோம். அவ்வாறுதான் தமிழகத்தில் போராட்டங்கள் எழுச்சியோடு நடைப்பெற்று கொண்டு இருக்கிறது. இதில் சாதி, மத பேதமின்றி மக்கள் பங்கேற்கிறார்கள் என்று குறிப்பிட்டார்.இறுதியாக, தேசத்தின் ஒற்றுமைக்காகவும், சமத்துவத்திற்காகவும், நல்லாட்சிக்காகவும் இறைவனிடம் பிரார்த்திப்போம் என்றார்.



ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT