ADVERTISEMENT

ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜனின் கருத்தும்.. அமைச்சர் மனோ தங்கராஜின் பதிலும்! 

07:50 AM Oct 23, 2022 | tarivazhagan

ADVERTISEMENT

ADVERTISEMENT

தெலுங்கானா ஆளுநராக தமிழிசை சௌந்தர்ராஜன் பதவியேற்று 3 ஆண்டுகள் நிறைவு பெற்ற நிலையில் அது குறித்து புத்தகம் ஒன்றை கடந்த 20ம் தேதி வெளியிட்டார். மேலும் அந்தப் புத்தக வெளியீட்டு விழாவில் பேசியிருந்தார். அதில் 'உங்களை அங்கே விரட்டுகிறார்கள். நீங்கள் ஏன் தமிழ்நாட்டில் மூக்கை நுழைக்கிறீர்கள் எனக் கேட்கிறார்கள். இன்று சொல்கிறேன், தமிழ் நாட்டில் மூக்கையும் நுழைப்பேன், தலையையும் நுழைப்பேன், வாலையும் நுழைப்பேன், காலையும் வைப்பேன். என்னை யாரும் தடுக்க முடியாது” எனக் கூறியிருந்தார். அவரின் கருத்து பெரும் பேசுபொருளாகியுள்ளது.

சில தினங்களுக்கு முன்பு செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் செஞ்சி மஸ்தான், “இலக்கிய செல்வராக திகழ்ந்த குமரி அனந்தனின் மகள் இப்படி பேசுவது அநாகரீகமான செயல்'' என்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், தமிழக தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் மனோ தங்கராஜ், கன்னியாகுமரி மாவட்டத்தில் நேற்று பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். பின்னர் நாகர்கோவிலில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், “மாநிலத்தின் அதிகாரங்களை பிடுங்கி, மாநில சுயாட்சி தத்துவத்திற்கு எதிராக மத்தியில் அதிகார குவியல் இருப்பதால், பல வழிகளில் மாநில உரிமையை பறிக்க முயற்சி செய்து வருகிறது மத்திய அரசு. இதை திமுக தொடர்ந்து எதிர்த்து வருகிறது. மாநிலங்களுக்கான அதிகாரத்தை அதிகமாக வழங்க வேண்டும் என்பது அனைத்து மாநிலங்களின் கோரிக்கை. இதனை மீறும் செயல் வன்மையான கண்டனத்திற்குரியது. தமிழக முதல்வரிடம் பேசி இதற்கான முழுமையான நடவடிக்கை மேற்கொள்வோம்.

தமிழகத்தில் வால், மூக்கு, தலையை நுழைப்பேன் என்று தமிழிசை கூறுகிறார். நாங்கள் கூறுவது உடலையே நுழையுங்கள், ஆனால் இது எதுவும் எடுபடாது. அவர்களது சங்கம் கலைந்து கொண்டு இருக்கிறது, அந்த விரக்தியின் வெளிப்பாடாக பார்க்கிறேன்.

அன்பு, அறன் என்ற சொல்லுக்கு நேர் எதிர்மறை சொல்லான வெறுப்பு என்பதை பேசுகின்றவர்கள் பாஜக கட்சியினர். ஆன்மீகங்களுக்கும் அவர்களுக்கும் சம்பந்தமில்லை. மாற்று மதங்களை கொச்சைப்படுத்தி இழிவுபடுத்தும் செயல் ஆன்மீகம் ஆகாது. ஆளுநர் பதவி வேண்டுமா, வேண்டாமா என்னும் சர்ச்சை நடந்து வருகிறது. எப்போதுமே ஆளுநர் பதவி தலைவலியாக இருந்து வருகிறது” என்று தெரிவித்தார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT