ADVERTISEMENT

29 மாநகராட்சிகளில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்!

07:07 PM Feb 02, 2022 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தங்களது வேட்பாளர் பட்டியல், தொகுதிப் பங்கீடு ஆகிய பணிகளில் மும்முரம் காட்டி வருகிறது. கட்சிகள் சார்பில் வேட்பாளர் பட்டியல் தொடர்ச்சியாக வெளியாகி வருகிறது.

இந்நிலையில் சென்னை மாநகராட்சியில் நான்கு வார்டுகள் உட்பட மொத்தம் 29 மாநகராட்சி வார்டுகளில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிட இருக்கிறது. சென்னை, தாம்பரம், ஆவடி, கடலூர், தஞ்சை, திருச்சி மாநகராட்சி வார்டுகளிலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிடுகிறது. கும்பகோணம், சேலம், ஈரோடு, திருப்பூர், சிவகாசி, தூத்துக்குடி மாநகராட்சி வார்டுகளுக்கான வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதேபோல் 55 நகராட்சி வார்டுகள், 60 பேரூராட்சி வார்டுகளுக்கான வேட்பாளர் பட்டியலை மார்க்சிஸ்ட் கட்சி அறிவித்துள்ளது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT