ADVERTISEMENT

கனிமொழி வருவாரா? காத்திருக்கும் வேலூர்! 

03:44 PM Jul 30, 2019 | rajavel



வேலூர் மக்களவை தொகுதிக்கான தேர்தல் பிரச்சாரம் களைகட்டியிருக்கிறது. ஜூலை 30 மற்றும் 31 ஆகிய இரண்டு நாட்கள், தேர்தல் பிரச்சரம் செய்ய வேலூருக்கு கனிமொழி வருவதாக திமுகவின் அதிகார பூர்வ நாளேடான முரசொலியில் செய்தி வெளிவந்தது. ஆனால் அவர் வருவாரா ? என கேள்வி எழுந்துள்ளது.

ADVERTISEMENT


ஜூலை 26-ந் தேதியோடு முடிவடைவதாக இருந்த நாடாளுமன்ற கூட்டத்தொடர், ஆகஸ்ட் 7 -ந்தேதி வரை நீட்டிக்கபட்டிருக்கிறது. நீட்டிக்கப்பட்ட நாட்களில் முக்கியமான பல மசோதாக்களை கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. திமுகவின் பாராளுமன்ற குழுத் தலைவர் டி.ஆர்.பாலு, வேலூர் தேர்தல் பிரச்சாரத்தில் இருப்பதால், பாராளுமன்றம் நடக்கும் நேரத்தில், மசோதாக்கள் தொடர்பாக மற்ற கட்சித் தலைவர்களிடம் கலந்து பேசவும், முக்கியமான முடிவுகளை எடுப்பதற்கும் ஏற்ற ஒரு தலைவர் டெல்லியில் இருக்கவேண்டும் என்று திமுக கட்சித்தலைமை கருதுகிறது.

ADVERTISEMENT


என்.ஐ.ஏ. சட்ட மசோதாவிற்கு ஆதரவாக தி.மு.க வாக்களித்து சர்ச்சைகளையும் எதிர்ப்புகளையும் சந்தித்தது போன்றதொரு நிகழ்வு இனி நடக்காமல் பார்த்துக்கொள்வது குறித்தும் திமுக தலைமை யோசித்துள்ளது. அதற்காக, கனிமொழி எம்.பி டெல்லியில் இருப்பது அவசியமாகிறது. மேலும், கட்சித் தலைமை அனைத்து எம்.பிக்களையும் நாடாளுமன்ற கூட்டத் தொடரில் பங்கேற்குமாறு வலியுறுத்தியுள்ளது. எனவே, வேலூர் பிரச்சாரத்திற்காக கனிமொழி செல்ல வாய்ப்பில்லை என்று அறிவாலய வட்டாரங்கள் கூறுகின்றன.


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT