ADVERTISEMENT

ரஜினி கொடுப்பார் என்று நம்புகிறோம்: பாஜகவுக்கு சின்னமாக நோட்டாவையே கொடுக்கலாம்: கமல் பேட்டி

12:53 PM Mar 10, 2019 | rajavel


மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு பேட்டரி டார்ச் சின்னம் ஒதுக்கி தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து அக்கட்சியின் தலைவர் கமல் இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார்.

ADVERTISEMENT

அப்போது அவர்,

ADVERTISEMENT

மிக பொருத்தமான சின்னத்தை எங்களுக்கு வழங்கியதற்காக தேர்தல் ஆணையத்திற்கு நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன். எங்களுக்கு ‘பேட்டரி டார்ச்’ சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. நிச்சயம், தமிழகத்தில் ‘ஒளி பாய்ச்சுவோம்’ எனும் நம்பிக்கை இருக்கிறது.



பேட்டரி லைட் கொடுத்திருக்கிறார்கள். அதனை வைத்தாவது கட்சியை கண்டுபிடிக்கட்டும் என்று பொன்.ராதாகிருஷ்ணன் கூறியிருக்கிறாரே?

எந்தக் கட்சி என்று சொல்லவில்லை என்றால், அவர்கள் கட்சி என்று நினைக்க வேண்டியிருக்கும். ஏற்கனவே நோட்டாவில் கண்ணுக்குத் தெரியாமல் இருக்கும் அந்த கட்சியை தேடித்தான் கண்டுபிடிக்கணும். அதற்கு இந்த டார்ச் பயன்படும். ஏனென்றால் மக்களும் தேடிக்கொண்டிருக்கிறார்கள். நோட்டாவில் மிச்சமிருக்கும் கட்சியை வெளியே அனுப்புவதற்கு. அவர்களுக்கு சின்னமாக நோட்டாவையே கொடுக்கலாம்.

பாராளுமன்றத் தேர்தலுக்கு பிறகு நடிகர்களெல்லாம் காணாமல் போவார்கள். அரசியலுக்கு வரக்கூடிய நடிகர்களெல்லாம் வியாபார நோக்கத்துடன் வருகிறார்கள் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியிருக்கிறாரே?

சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு பெயர் மாற்றி வைத்தார்களே அந்த நடிகரில் இருந்து ஆரம்பித்து சொல்கிறாரா? எல்லா நடிகர்களையும் அப்படி சொல்ல முடியாது. தேர்தல் பதட்டத்தில் அப்படி பேசுகிறார் என்று நினைக்கிறேன்.

மக்கள் நீதி மய்யம் தனித்து போட்டியா? கூட்டணி அமைத்து போட்டியிடுகிறதா?

எங்களின் மக்கள் நீதி மய்யம் கட்சி, மக்களிடம் கூட்டணி வைத்திருக்கிறது. மக்களுடன் கூட்டணி வைத்திருப்பதுதான் பலமான கூட்டணி என்று நான் நினைக்கிறேன். இதுதான் வெற்றிக் கூட்டணி.

தேர்தல் அறிக்கை எப்போது வெளியிடப்படுகிறது? நேர்காணல் எப்போது?

நாளை 11ம் தேதி முதல் 15ம் தேதி விருப்பமனு அளித்தவர்களுடன் நேர்காணல் நடைபெறுகிறது. அதேவேளையில், தேர்தல் அறிக்கையையும் தயார் செய்துகொண்டிருக்கிறோம். விரைவில் தேர்தல் அறிக்கையை விரைவில் வெளியிடுவோம் என்றார்.

மேலும் பேசிய அவர், ஏழு பேர் விடுதலை விவகாரத்தில் சட்டம் எப்படி முக்கியமோ அதேபோல், கருணையும் மிகமிக முக்கியம். சட்டம் அதன் போக்கில் செய்யட்டும். நாம் கருணை அடிப்படையில் என்ன செய்யவேண்டுமோ அதைச் செய்யவேண்டும். அதேபோல், ஏழு பேர் விடுதலை எப்படி முக்கியமோ, ஏழரை கோடி பேரின் விடுதலையும் இங்கே முக்கியம். இவ்வாறு தெரிவித்தார்.

‘21 சட்டசபைத் தொகுதி இடைத்தேர்தலில், நிற்கப்போவதில்லை என்று உங்கள் நண்பர் ரஜினிகாந்த் இப்போது அறிவித்திருக்கிறார். அவரிடம் நீங்கள் ஆதரவு கேட்பீர்களா?’ என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு கமல், ‘ஆதரவு என்பது கேட்டுப் பெறுவது அல்ல. தாமாகவே கொடுக்கவேண்டும். அப்படி கேட்காமல், தாமாகவே கொடுப்பதும் பெரியவிஷயம். பெறுவதும் பெரியவிஷயம். ரஜினி கொடுப்பார் என்று நம்புகிறோம் என்று தெரிவித்தார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT