ADVERTISEMENT

கமலுக்கு கொள்கை இல்லை... அவரை சக போட்டியாளராக நினைக்கவில்லை... சீமான் அதிரடி

11:04 AM Apr 14, 2019 | rajavel

ADVERTISEMENT

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நக்கீரன் இணையதளத்திற்கு சிறப்பு பேட்டி அளித்தார்.

ADVERTISEMENT

கேள்வி: இந்த தேர்தலில் உங்களைப்போலவே மாற்று அரசியலை முன் வைக்கிறார் கமல்ஹாசன். அவருக்கும் உங்களுக்கும் இந்த தேர்தலில் போட்டி இருப்பதாக ஒரு பேச்சு இருக்கிறது. அவரும் திமுக, அதிமுக இந்த இரண்டு கட்சிகளும் வேண்டாம். இதுவரை ஆண்ட கட்சிகள் வேண்டாம் என்று சொல்லுகிறார். அதை எப்படி பார்க்கிறீர்கள்?.



பதில்: அப்படி அவர் சொல்லவில்லை. அவர் முயற்சி செய்தார். ராகுலை பார்த்தார். இடது சாரிகளை கூப்பிட்டார். யாரும் வரவில்லை. சட்டசபை தேர்தல், அதற்கு பிறகு வரக்கூடிய தேர்தலில் என்ன முடிவு எடுப்பார் என்பதை யோசிக்கணும். அவருக்கு ஒரு வரைவு இல்லை. கொள்கை இல்லை. நான் தமிழன், என் இனம் தமிழினம், என் தேசம் தமிழ் தேசம், இங்கு வாழுகிற என் மக்களின் மொழி, கலை, கலாச்சாரம், பண்பாடு, வழிபாடு, வேளாண்மையை காப்பாற்ற வேண்டும் என்று நினைக்கிறேன். என் வளங்களை பாதுகாக்க வேண்டும் என்று நினைக்கிறேன். என் மொழி செத்துவிட்டது. அதனை மீட்க வேண்டும் என்று நினைக்கிறேன். என் இனம் ஈழத்தில் அழிக்கப்பட்டிருக்கிறது. அதற்கு ஒரு நீதியை பெற்றுக்கொடுக்க வேண்டும் என்று நினைக்கிறேன். எனக்கு உரிமையான கச்சத்தீவை மீட்க வேண்டும் என்று நினைக்கிறேன். என் நிலத்தை நாசமாக்கும் நாசக்கார திட்டங்களை நுழையவிடக்கூடாது என்று நினைக்கிறேன்.





எனக்கென்று ஒரு கொள்கை முடிவு இருக்கிறது. அவருக்கு அது இல்லை. முதலில் அவர் எதையும் வரையறுக்கவில்லை. அவர் இந்தியரா. திராவிடரா. தமிழரா. வேட்பாளர்களை அறிமுகப்படுத்தும்போது ஒரு பாட்டு போடுகிறார். திராவிடர் என்றொரு இனம், அது பழம்பெரிய இனம்... அப்படியே கொஞ்சம் போய், தமிழனின் பெருமை தெரியுதடா... என்று வருகிறது. ஒன்று தமிழனின் பெருமையை பேச வேண்டும். இல்லை திராவிடர் பெருமையை பேச வேண்டும். எதையாவது ஒன்றை வரையறுக்க வேண்டும். நிறைய தடுமாற்றங்கள் இருக்கிறது. நான் அவரை சக போட்டியாளராக நினைக்கவில்லை. இவ்வாறு கூறினார்.



ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT