ADVERTISEMENT

நாங்க என்ன குச்சிமிட்டாய் வச்சுகிறதா..? தி.மு.க.காரன் எங்க போவான்? கே.என்.நேரு பேச்சு: கை தட்டி, விசில் அடித்த தொண்டர்கள்

11:13 AM Jun 22, 2019 | rajavel

ADVERTISEMENT

தமிழகத்தில் ஏற்பட்டுள்ள தண்ணீர் தட்டுப்பாட்டை போக்காத அதிமுக அரசை கண்டித்து ஜூன் 22ஆம் தேதி தமிழகம் முழுவதும் திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திருச்சியில் முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் ஆர்பாட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டியிட வேண்டும் என்று கே.என்.நேரு பேசியது பெரிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ADVERTISEMENT


கே.என்.நேரு பேசுகையில், கலைஞர் ஆட்சியில் இருக்கும்போது திருச்சியில் உள்ள விவசாயிகள் நிலத்தடி நீர் விவசாயத்திற்கு குறைகிறது என்று சொன்னார்கள். உடனே கலைஞர் கவனத்திற்கு கொண்டு சென்றோம். தடுப்பணை கட்டிக்கொடுத்தார். அதே போல வெள்ளம் வந்தபோது, இந்த கோரையாறு உய்யக்குண்டானை சரி செய்ய 77 கோடியில் தொட்டி பாலம் கட்டிக்கொடுத்தார். 2 டேம், 8 ஏரி இருக்கிறது. 1000க்கும் மேற்பட்ட கிராமங்கள் பயன்பெற்று வருகிறது. அதனால் தற்போது இந்த தண்ணீர் பிரச்சனையில் இருந்து தப்பித்து இருந்தோம்.


இந்த 8 ஆண்டு ஆட்சியில் மேட்டூரில் இருந்து திறந்து விடும் தண்ணீரை 2 இலட்சம் கனஅடி காவிரியிலும், 3 இலட்சம் அடி கொள்ளிடத்திலும் தண்ணீர் விட்டால் 3000 கிராமங்கள் மேல் பயன்பெறும். தற்போது முதன்மை பொறியாளரிடம் கொள்ளிடத்தில் தண்ணீர் திறந்து விடுங்கள் 500 கிராமங்களுக்கு மேல் நிலத்தடி நீர் பெருகும் என்றேன். ஆனால் அதை அவர் கேட்கவே இல்லை. திறந்தால் நிவாரணம் கொடுக்க வேண்டும் என்று ஒரு நாளிலே திறந்து விட்டு கடலிலே கலக்க செய்து விட்டார். இங்கே இரண்டு அமைச்சர்கள் இருக்கிறார்கள். ஆனால் இதை எல்லாம் கேட்கவில்லை என்று பேசிக்கொண்டு இருந்தவர், அடுத்து அரசியல் பக்கம் திரும்பினார்.

இது என்னுடைய தனிப்பட்ட கருத்து. கட்சி கருத்து அல்ல. கூட்டணியில் சேர்ந்து எல்லாம் ஜெயிச்சுட்டாங்க. ஏற்கனவே கூட்டணியில் இருந்தபோது யுவராஜ், மயூரஜெயக்குமார் கழக ஆட்சியை தொடர்ந்து விமர்சனம் செய்தார்கள். காங்கிரஸ் கட்சியுடன் இருந்த இந்த உறவை கெடுத்தது இவர்கள்தான். சட்டமன்றத்தில் தலைவர் முன்னாடியே செல்லக்குமார் விமர்சனம் செய்கிறார். ஆனால் அதே செல்லக்குமாரை தற்போது கூட்டணியில் வேலை செய்து ஜெயிக்க வைக்கிறோம்.




நேற்று ஒருவர் பேசுகிறார் 'நாங்க தென்தென்னையில் 200 வட்டத்தில் 35 வட்டத்தை பெற்றே திருவேன்' என்கிறார். நான் தலைவருக்கு சொல்வேன். இந்த மக்களுக்கு நாம் பயன்பெற வேண்டும் என்றால் உள்ளாட்சி தேர்தலில் தனித்தே நின்றால் நன்றாக இருக்கும். எவ்வளவு நாளுக்குத்தான் பல்லக்கைத்தூக்குவது. தூக்கிக்கொண்டேதான் இருக்கிறோம். இது என்னுடைய கருத்து. தலைவர் என்ன முடிவு எடுக்கிறாரோ? அதை ஏற்றுக்கொள்வேன். காங்கிஸ் கட்சிக்குள் ஒவ்வொருத்தரும் நீ பெரியவனா? நான் பெரியவனா? என்கிற போட்டியில் 35 சீட்டு வாங்குவேன், 50 சீட்டு வாங்குவேன்னு சொல்றான். நாங்க என்ன குச்சிமிட்டாய் வச்சுகிறதா? தி.மு.க.காரன் எங்க போவன். இது என்னுடைய கருத்து. தலைவருடைய கருத்து அல்ல. திருச்சியை பொறுத்தவரையில் நாங்க தனியாக நிற்க வேண்டும் என்பதை சொல்லி வலியுறுத்துவேன் என்றார்.

அப்போது கூட்டத்தில் உள்ள தொண்டர்களின் கைதட்டல் அடங்க வெகுநேரம் ஆனது.


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT