ADVERTISEMENT

ஜெகன் போட்ட உத்தரவால் அதிர்ச்சி அடைந்த மக்கள்! 

11:19 AM Aug 02, 2019 | Anonymous (not verified)

தமிழகத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கொண்டு வந்த திட்டம் அம்மா உணவகம். இதே போல் ஆந்திராவில் சந்திரா பாபு நாயுடு ஆட்சி காலத்தில் அண்ணா உணவகம் கொண்டு வரப்பட்டது. தற்போது ஜெகன் ஆட்சியில் அண்ணா உணவகத்திற்கு புதிய ஒப்பந்தம் எதுவும் புதிப்பிக்கவில்லை என்று தெரிகிறது. இதனால் அண்ணா உணவகம் மூடும் நிலைக்கு வந்துள்ளது என்கின்றனர். இதனை அடுத்து வியாழக்கிழமை முதல் அனைத்து 'அண்ணா' உணவகங்களும் மூடப்பட்டன. இதனால் ஏழை எளிய மக்கள் குறைந்த விலையில் உணவு கிடைக்காமல் தவிப்பதால் முதல்வருக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.

ADVERTISEMENT


ADVERTISEMENT


இந்த அண்ணா உணவகங்களில் 5 ரூபாய்க்கு காலை டிபன் மற்றும் 5 ரூபாய்க்கு மதிய சாப்பாடு உணவுகள் வழங்கப்பட்டது என்பது குறிப்படத்தக்கது. தற்போது அண்ணா உணவகம் மூடியதால் குறைந்த விலையில் உணவு கிடைக்காமல் ஏழை, எளிய மக்கள் அவதிப்படுவதாக தெரிவிக்கின்றனர். இந்த அண்ணா உணவகம் நல்ல திட்டம் என்றும் அரசியலில் பழி வாங்கும் நோக்கில் இந்த உணவகம் மூடப்பட்டுள்ளது என்று ஆந்திர மக்கள் கருது தெரிவித்து வருகின்றனர். இதுகுறித்து ஜெகன்மோகன் ரெட்டி தரப்பில் கூறும் போது, அண்ணா உணவகங்கள் கட்டியதில் மிகப்பெரிய அளவில் ஊழல் நடந்திருப்பதாகவும், இந்த ஊழல் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும்,அதேபோல் விரைவில் குறைந்த விலை உணவகங்கள் திறக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளனர்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT