ADVERTISEMENT

‘இந்தியா’ கூட்டணி பொதுக்கூட்டம் ரத்து

03:48 PM Sep 16, 2023 | prabukumar@nak…

ADVERTISEMENT

ADVERTISEMENT

அடுத்த வருடம் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவிற்கு எதிராகக் கூட்டணி அமைப்பது குறித்துப் பல்வேறு எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து பேசி வருகின்றன. அந்த வகையில் பீகார் மாநிலம் பாட்னாவில் எதிர்க்கட்சித் தலைவர்களின் முதல் கூட்டம் கடந்த ஜூன் மாதம் 23 ஆம் தேதி நடைபெற்றது. இதையடுத்து எதிர்க்கட்சித் தலைவர்களின் 2 ஆவது ஆலோசனைக் கூட்டம் பெங்களூருவில் கடந்த ஜூலை மாதம் 17 மற்றும் 18 ஆகிய இரு தேதிகளில் நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து எதிர்க்கட்சிகளின் மூன்றாவது இரண்டு நாள் கூட்டம் ஆகஸ்ட் 31 மற்றும் செப்டம்பர் 1 ஆகிய தேதிகளில் மும்பையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் 28 கட்சிகளைச் சேர்ந்த 65 தலைவர்கள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தின் போது இந்தியா கூட்டணி, ஒருங்கிணைப்புக் குழு ஒன்றை உருவாக்கி அதற்கான அறிவிப்பை வெளியிட்டிருந்தது. அதன்படி, இந்த ஒருங்கிணைப்புக் குழுவில் கே.சி. வேணுகோபால், சரத்பவார், ராகவ் சத்தா, அபிஷேக் பானர்ஜி, டி.ராஜா, தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், ஹேமந்த் சோரன், உமர் அப்துல்லா என மொத்தம் 13 பேர் இடம்பெற்றுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து அக்டோபர் 2 ஆம் தேதி மத்தியப் பிரதேசம் மாநிலம் போபாலில் இந்தியா கூட்டணி சார்பில் பொதுக்கூட்டம் நடைபெறும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த கூட்டத்தில் இந்தியா கூட்டணியின் தொலைநோக்கு திட்டம் வெளியிடப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் அக்டோபர் 2 ஆம் தேதி நடைபெறவிருந்த இந்தியா கூட்டணியின் பொதுக்கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக மத்தியப் பிரதேச மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் கமல்நாத் தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT