Ukraine war tensions ... PM Modi advises!

Advertisment

ரஷ்யாவிற்கும், உக்ரைனுக்கும் இடையேயான போர் பதற்றம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ரஷ்யாவின் தாக்குதலை அடுத்து ரஷ்யாவுடனான தூதரக ரீதியிலான உறவை உக்ரைன் துண்டித்துள்ளது. ரஷ்ய ராணுவத்தின் தாக்குதலில் 40 க்கும் மேற்பட்ட உக்ரைன் நாட்டு ராணுவ வீரர்கள் இறந்துள்ளதாகவும், தாங்கள் நடத்திய பதில் தாக்குதலில் ரஷ்யாவை சேர்ந்த ஆக்கிரமிப்பாளர்கள் 50 பேர் கொல்லப்பட்டதாகவும் உக்ரைன் அறிவித்துள்ளது.

உக்ரைனில் உள்ள இந்தியர்களை மீட்க இந்திய வெளியுறவுத்துறை தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக வெளியுறவுத்துறைஇணையமைச்சர்முரளிதரன் தெரிவித்துள்ளார்.இந்நிலையில் உக்ரைனில் நிலவும் போர் பதற்றம் காரணமாக பிரதமர் மோடி ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். இந்த ஆலோசனையில் மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங்,அமித்ஷா, ஜெய்சங்கர் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளதாகதகவல்கள் வெளியாகியுள்ளது.