ADVERTISEMENT

தைரியம் இருந்தா என்னை கைது பண்ணி பாருங்க..! தங்கதமிழ்செல்வன் சவால்..!

12:03 PM Mar 04, 2018 | Anonymous (not verified)


மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 70வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வத்தலக்குண்டில் டிடிவி தினகரன் அணி சார்பில் நேற்று இரவு நடைபெற்றது.

இக்கூட்டத்தில் கலந்து கொண்ட டிடிவி தினகரனின் தீவிர ஆதரவாளரான தங்கதமிழ்செல்வன் பேசியதாவது,

அம்மா திட்டமான ஸ்கூட்டர் திட்டத்தை தொடங்கி வைக்க பிரதமர் மோடி வந்தார். இவ்விழாவில் பிரதமர் மோடி பேசும் போது கூட தமிழில் பேசினார். ஆனால் இந்த ஈ.பி.எஸ் - ஓ.பி.எஸ் ஆங்கிலத்தில் பேசினார்கள். அதுபோல் அம்மா என நான்கு முறை சொன்னார்களே தவிர மோடி என 32 தடவை சொன்னார்கள்.. இதுவா அம்மாவுக்கு காட்டுகிற விசுவாசம்? அம்மா மூலம் ஆட்சியில் உட்காந்து கொண்டு அம்மாவுக்கு விசுவாசமாக இல்லாமல் மோடிக்கு துதிபாடி வருகிறீர்களே வெட்கமாக இல்லை?. இந்த ஸ்கூட்டர் திட்டம் மூலம் 50ஆயிரம் பேர் தான் பயன் அடைவார்கள் ஆனால் அம்மா ஏற்கனவே அறிவித்து இருந்த செல்போன் திட்டத்தை செயல்படுத்தி இருந்தால் 2கோடி மக்கள் பயனடைந்து இருப்பார்கள்.

இதை எல்லாம் சொல்ல போனால் நாம குற்றவாளி என்கிறார்கள். ஏழு தனிப்படை அமைத்து தேடுகிறோம் என்கிறார்கள். இதோ உங்க முன்னாடி தான் பேசி கொண்டு இருக்கிறேன் ’தைரியம் இருந்தா என்னை கைது பண்ணி பாருங்க என்ன விபரீதம் நடக்கும் என்பது உங்களுக்கு தெரியும்’ அதுனால தான் எங்களை கைது பண்ண வில்லை. ஓபிஎஸ் நூற்றாண்டு விழாவில் பேசும் போது எல்லாம் அதிமுக எஃகு கோட்டை அதையாரும் ஆட்டவோ, அசைக்கவோ முடியாது என்கிறார் ஆனால் ஏற்கனவே அந்த கோட்டையில் 32 செங்களை உருவி இருக்கிறோம் ஒரு செங்கள் எடுத்தாலே கட்டிடம் தாங்காது அப்படி இருக்கும் போது 32 செங்களை உருவி இருக்கிறோம் என்றால் எப்ப வேண்டுமானலும் கட்டிடம் விழுகும்.

18 எம்.எல்.ஏக்களின் தீர்ப்பு எங்களுக்கு சாதகமாக இருக்கும் அதன் மூலம் நாங்க சட்டமன்றத்திற்குள் நுழைந்தால் உங்களுக்கு பதில் சொல்ல தெரியாது. அதுபோல் தீர்ப்பு எங்களுக்கு சாதகமாக இல்லை என்றால் தேர்தல் நடத்து.. அதில் நாங்க 18 பேரும் அண்ணன் டிடிவி தினகரன் ஆசியோடு வெற்றி பெறுவோம். அப்படி நாங்க வெற்றி பெறவில்லை என்றால் அரசியலை விட்டே ஒதுங்கி கொள்கிறோம். மக்கள் எங்க பக்கம்தான் இருக்கிறார்கள் அதுனால எப்ப தேர்தல் வந்தாலும் அமோகமாக வெற்றி பெற்று அதன் மூலம் அண்ணன் டிடிவியை முதல்வராக கொண்டுவருவோம் என்று கூறினார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT