ADVERTISEMENT

“பாஜக செய்யும் பேரணிகளுக்கு இதுவரை எதிர்ப்பு தெரிவித்ததில்லை” - விசிக தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி

03:43 PM Nov 06, 2022 | angeshwar

ADVERTISEMENT

ADVERTISEMENT

சென்னை கோயம்பேட்டில் தனது முன்னுரிமையுடன் கூடிய மனுஸ்மிரிதி புத்தகத்தை மக்களுக்கு இலவசமாக வழங்கினார்.

இதன் பின் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “ஆர்.எஸ்.எஸ் அமைப்பிற்கு தனியாக அலுவலகம் இல்லை. 50 இடங்களில் பேரணி நடத்த விண்ணப்பம் செய்தார்கள். அவர்கள் ஆதார் அட்டைகள், உறுப்பினர் அட்டைகள் போன்றவற்றை காட்டவில்லை. அவர்களின் உறுப்பினர்கள் யார் என்பதும் தெரியாது. பொறுப்பாளர்கள் யார் என்பதை உயர்நீதிமன்றம் கேட்டது. அவர்களால் தரமுடியவில்லை.

நாங்கள் இந்துச் சமூகத்திற்கு பாதுகாப்பு அளிக்கக்கூடிய வகையில் அவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தவே மக்களுக்கு இலவசப் பிரதியாக வழங்குகிறோம். இந்த விழிப்புணர்வை 1927ல் டிசம்பர் திங்கள் 25ம் நாள் டாக்டர் அம்பேத்கர் இதனை எரித்து நாட்டு மக்களுக்கு உணர்த்தினார். வட இந்தியாவில் ஆர்.எஸ்.எஸ் அமைப்புகள் கொட்டமடிப்பதை போல தமிழகத்திலும் கொட்டம் அடிக்க பார்க்கிறார்கள்.

பாஜக அரசியல் ரீதியிலான பேரணி நடத்துகிறது என்றால் அதை நாங்கள் இதுவரை எதிர்க்கவில்லை. ஆர்.எஸ்.எஸ் பேரணி நடத்தினால் மதவெறி அரசியலுக்கு அடித்தளமிடுகிறது என்று பொருள். சாதி அடிப்படையில் மக்களை பிளவு படுத்த நினைக்கிறது என்று பொருள். ஆர்.எஸ்.எஸ் இங்கு காலூன்றினால் தமிழகத்திற்கு மிகப் பெரிய பாதிப்பு” எனக் கூறினார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT