ADVERTISEMENT

''வந்தார்கள், போனார்கள் என்பதெல்லாம் எனக்கு தேவையில்லை... சசிகலாவுக்கும் இது பொருந்தும்''-வைரலாகும் ஜெ.தீபா ஆடியோ!

10:51 PM Sep 06, 2022 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா பேசுவதாக ஆடியோ ஒன்று வெளியாகி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

''அனைவருக்கும் வணக்கம். நான் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா ஜெயக்குமார் மாதவன். சில காலங்களாக ஒரு சில தவறான கருத்துக்கள் மீடியாக்களில் பரவி வருவதால் அதை மறுக்க வேண்டிய கடமை எனக்கு உள்ளது என்பதால் மட்டுமே இந்த அறிக்கையை நான் வெளியிடுகிறேன். அதாவது ஒரு மிகுந்த கடுமையான மிகப்பெரிய சட்ட போராட்டத்திற்கு பின்னரே 'வேதா நிலையம்' என்ற போயஸ் கார்டன் என்ற எங்களது பூர்வீக சொத்து எனக்கு வந்தது. அதாவது எனது தந்தை ஜெயக்குமார் மற்றும் ஜெயலலிதா அவர்களின் தாயார் சந்தியா அவர்களால் வாங்கப்பட்டு கட்டப்பட்ட வீட்டில் குடும்பமாக அங்கே வாழ்ந்து வந்தனர். அந்த இல்லம் எனது பாட்டி சந்தியா அவர்களின் மறைவுக்கு பின்னர் எனது அத்தை ஜெயலலிதாவுக்கு உயில் வழியாக கொடுக்கப்பட்டது. அதே நேரத்தில் எனது தந்தை ஜெயக்குமாரும் அங்கேதான் வசித்து வந்தார். அந்த காலகட்டங்களில் எனது அத்தை சினிமா துறையில் நடிகையாக நடித்துக் கொண்டிருந்தார். அந்த நேரங்களில் அந்த காலகட்டத்தில் எனது தந்தை ஜெயக்குமார் அவர்களின் திருமண நடைபெற்றது. அதை எனது அத்தையும், அவர்களது உறவினர்களும், சித்திகள் போன்ற பெரியவர்கள் நடத்தி வைத்தனர். அதன் பின்னர் எனது தாயார் விஜயலட்சுமி, எனது தந்தை ஜெயக்குமாரும் எனது அத்தையுடன் அதே இல்லத்தில் கூட்டுக் குடும்பமாக தான் பல காலங்களாக வசித்து வந்தனர். இப்படிப்பட்ட சாதாரணமான இல்லமாக தான் அந்த வீடு அப்போது அந்த காலகட்டங்களிலிருந்தது. அந்த காலகட்டத்தில் அதே இல்லத்தில் வசித்துக் கொண்டிருந்த நேரத்தில் தான் நான் பிறந்தேன் அந்த வீட்டில். அதன் பிறகு ஒரு சில காலங்களுக்கு பின்னர் எல்லா குடும்பங்களிலும் உள்ளதுபோல் ஒரு சில மிகச் சிறிய கருத்து வேறுபாடு காரணமாக எனது தந்தையும், தாயாரும் அந்த வீட்டை விட்டு வெளியே வந்தனர்.

அதன் பின்னர் டி.நகரில் உள்ள எங்களது மற்றொரு பூர்வீக இல்லத்தில் நாங்கள் வசித்து வந்தோம். இதற்கு இடையே அத்தை அழைக்கும்போதெல்லாம் நாங்கள் அங்கு சென்று வருவோம். ஒருகால கட்டத்தில் எங்களை இங்கேயே இருக்கவைக்க விரும்பியதால் அங்கு வசித்து வந்தோம். அதன் பிறகு அவர் அரசியலில் ஈடுபட்ட பின்னர் அங்கிருந்து முழுமையாக வெளியே வந்து விட்டோம். இதுதான் அந்த வீட்டில் நாங்கள் வாழ்ந்ததற்கான எனக்குத் தெரிந்த விஷயங்கள். எனது தாய் வழியாகவும் தந்தை வழியாகவும் தெரிந்து கொண்ட ஒரு சில விஷயங்கள். ஆகவே அது எங்களுடைய பூர்வீக சொத்து என்பதில் எந்த கருத்து வேறுபாடும் யாருக்கும் இருக்க முடியாது. சட்ட ரீதியாக எப்படி ஆராய்ந்து பார்த்தாலும் அது பூர்வீக சொத்து தான். பாட்டி அவர்களால் வாங்கப்பட்டது. அதன் பின்னர் எங்கள் அத்தைக்கு அவர் கொடுத்தார். அத்தை திருமணமாகாதவர் என்பதால் தந்தை வழியாக அவர்தான் ஒரே உடன்பிறப்பு சகோதரர். அவருடைய பிள்ளைகளான எனக்கும் எனது சகோதரர் தீபக்கிற்கும் சட்ட ரீதியாக கோர்ட் வழியாகத்தான் இந்த சொத்தை நாங்கள் திரும்பப் பெற்றோம்.

இப்படி உள்ள சூழ்நிலையில் யாரோ மூன்றாவது நபர்கள் அத்தையுடன் இருந்தார்கள், வந்தார்கள், போனார்கள், சென்றார்கள் என்பதெல்லாம் என்னை பொறுத்தவரை எனக்கு இதெல்லாம் தேவையற்றது. எனக்கு தேவை என்னுடைய அத்தை மட்டும் தான். அவருடன் யார் இருந்தார், யார் போனார்கள் என்பதெல்லாம் எனக்குத் தேவையில்லை. என்னைப் பொறுத்தவரை இது என்னுடைய கருத்து. ஆகவே அவர் சொன்னார், இவர் சொன்னார், அவர்கள் விரும்பினார்கள், இவர்கள் விரும்பினார்கள் என்பதெல்லாம் எனக்குத் தெரிந்தவரை தேவையற்ற கருத்துக்கள். அவருடன் அரசியல் பயணத்தில் எண்ணற்ற பேர் இருந்திருப்பார்கள். எத்தனையோ பேர் பணிக்கு இருந்திருப்பார்கள். மிகப்பெரிய பொறுப்புகளில் இருந்திருக்கிறார்கள். நினைத்துப் பார்த்தால் கூட பிரமிக்க வைக்கக்கூடிய அந்தஸ்திலும், பொறுப்புகளிலும் இருந்திருக்கிறார். அப்படிப்பட்ட நபருக்கு எத்தனையோ பேர்களுடைய பணிகள் தேவைப்பட்டிருக்கும், உதவிகள் தேவைப்பட்டிருக்கும். ஆகவே அவருடன் பயணித்தவர்கள் எத்தனையோ ஆயிரம் பேர் இருந்திருப்பார்கள். அப்படி உள்ளவர்கள் எல்லாம் வந்து உரிமை கோர முடியாது. குடும்பத்திலோ, குடும்ப அந்தஸ்திலோ, குடும்ப சொத்துகளிலும் உரிமை கோர முடியாது. ஆகவே இதையெல்லாம் கடமையாக மறுக்கிறேன். அது யாராக இருந்தாலும் சரி. அவருடனே நாங்கள் பயணித்தோம் என்று சொல்லிக் கொள்ளும் சசிகலா அவர்கள் குடும்பத்தினர்களுக்கும் இது பொருத்தமானது. அவர்களுக்கும் நான் சொல்வது ஒன்றுதான் எல்லோருக்கும் சொல்வது ஒன்றுதான். இதுபோன்ற வதந்திகளை தயவு செய்து நீங்கள் மறுக்க வேண்டும். அந்த வீடு விற்பனைக்கு என்று நாங்கள் யாரும் சொல்லவில்லை, யாரையும் அணுகவும் இல்லை, யாரும் எங்களையும் அணுகவில்லை. வேதா நிலையத்தை பொருத்தவரை அதை பராமரிக்க வேண்டிய பொறுப்பு எங்களிடம் உள்ளது. அதை நாங்கள் கண்ணும் கருத்துமாக செய்து கொண்டிருக்கிறேன். மிக விரைவில் அங்கே குடியேறும் எண்ணம் எனக்கு இருக்கிறது. ஆகவே இது போன்ற வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வையுங்கள்'' என தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT