ADVERTISEMENT

தேர்தலுக்குத் தயாராகும் ஈரோடு தி.மு.க!

07:50 PM Nov 17, 2020 | prithivirajana

ADVERTISEMENT

ADVERTISEMENT

2021 ஏப்ரல் அல்லது மே மாத வாக்கில், தமிழக சட்டமன்றத்திற்குத் தேர்தல் வர உள்ளதால் அரசியல் கட்சிகள் அதற்கான ஆயத்தப் பணிகளில் இறங்கி விட்டன. குறிப்பாக தி.மு.க.வினரும் தமிழகம் முழுக்க களப்பணியில் தீவிரம் காட்டத் தொடங்கி விட்டார்கள்.


இன்று, (17.11.20) ஈரோடு தெற்கு மாவட்ட தி.மு.க செயற்குழுக் கூட்டம் கட்சியின் மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட அவைத் தலைவர் குமார் முருகேஸ் தலைமை தாங்கினார். மாவட்டச் செயலாளர் முத்துசாமி நிகழ்வில் பேசினார். பிறகு, கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களையும் முத்துசாமி வாசித்தார்.

அதில், "எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ளத் தயாராகும் வகையில் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஒன்றிய, மாநகரப் பகுதிகளில் செயல்வீரர் கூட்டம் நடத்துவது, வாக்காளர் சிறப்பு முகாம்களில் கட்சி நிர்வாகிகள் கட்டாயம் கலந்து கொண்டு புதிய வாக்காளர்களை சேர்ப்பது, நீக்கம் செய்தல் பணிகளை முன்னின்று செய்வது, வாக்காளர் பட்டியலைக் கொண்டு கட்சி நிர்வாகிகள், பூத் கமிட்டி உறுப்பினர்கள் வீடு வீடாகச் சென்று சரிபார்ப்பது, மாவட்ட, மாநகர, வார்டு கழக நிர்வாகிகள் தங்களது பகுதிகளில் பொதுமக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள், திட்டங்கள், குறைகள் உள்ளிட்ட விபரங்களைச் சேகரித்து தேர்தல் அறிக்கையில் சேர்க்கும் வகையில் அதைத் தொகுத்து மாவட்ட அலுவலகத்தில் வழங்க வேண்டும்" எனப் பல்வேறு தீர்மானங்களை அறிவித்தார்.

கூட்டத்தில் மாநில நிர்வாகிகளான கந்தசாமி, சச்சிதானந்தம், சந்திரகுமார், அருட்செல்வன், குறிஞ்சி சிவக்குமார், மாவட்ட நிர்வாகிகள் செந்தில்குமார், செல்லப்பொன்னி, பழனிசாமி, பிரகாஷ், மாநகரச் செயலாளர் சுப்பிரமணியன், திண்டல் குமாரசாமி மற்றும் கட்சியினர் கலந்து கொண்டனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT