J. Thiruvasakam has been appointed as Erode South District Youth Organizer dmk

திமுகவிற்கு வலுசேர்க்கும் துணை அமைப்பாக திராவிட முன்னேற்றக் கழக இளைஞரணியை அக்கட்சியினர் பார்க்கின்றனர். தற்போதைய முதல்வர் ஸ்டாலின் இளைஞராக இருக்கும் போது இளைஞரணியை தொடங்கினார். அதனைத் தொடர்ந்து இளைஞரணியின் மாநில அமைப்பாளராகவும் பணியாற்றி வந்தார். அவரைத் தொடர்ந்து சாமிநாதன்இளைஞரணியின் மாநில இணை அமைப்பாளராகவும், தொடர்ந்து மாநில இளைஞரணி செயலாளராகவும் நியமிக்கப்பட்டார்.

Advertisment

இதனையடுத்து திமுகவின் மாநில இளைஞரணி அமைப்பாளராகவும் அதைத்தொடர்ந்து மாநிலச் செயலாளராகவும் நியமிக்கப்பட்டுள்ள உதயநிதி ஸ்டாலின்தமிழகம் முழுக்க உள்ள மாவட்ட அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் அனைவரின் வயதை கருத்தில் கொண்டு அவர்களை இளைஞரணி பொறுப்பில் இருந்து விடுவித்து புதிய நிர்வாகிகளை நியமனம் செய்யும் பணியை மேற்கொண்டு வருகிறார்.

Advertisment

இந்நிலையில் கடந்த 5 ஆம் தேதி மாலை தமிழகம் முழுக்க ஒவ்வொரு மாவட்டத்திற்கும் இளைஞர் அணி மாவட்ட அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் நியமன அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதில் ஈரோடு தெற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் பொறுப்பில் ஜெ.திருவாசகம் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

இவரது தாத்தா ஆறுமுகம் பெரியார், அண்ணா, கலைஞர் ஆகியோர் இயக்கப் பணியில் இருந்த போது திமுகழகத்தின் கொள்கையை ஏற்று தலைவர்களோடு கட்சிக்காக பணியாற்றியவர். அந்த பகுதியின் தி.மு.க வார்டு செயலாளராக பணியாற்றி இருக்கிறார். அவரது மகன்களில் ஒருவர் தான் ஜெயக்குமார். இவரும் திமுகவில் தீவிரமாக இயங்கி வந்தார். இவரது மகன் தான் திருவாசகம். அதேபோல் ஆறுமுகத்தின் மற்றொரு மகன் ஆ.செந்தில்குமார் சிறுவயது முதலே திமுகவில் வீரியமான தொண்டராகப் பணியாற்றி வருகிறார். அவரின் உழைப்புக்கு மாணவரணி மாவட்ட அமைப்பாளர் பதவி, அடுத்து திமுக மாவட்ட பொருளாளர் பதவி வகித்து தற்போது ஈரோடு மாவட்ட திமுகழகத்தின் மாவட்ட துணைச் செயலாளராக பணியாற்றி வருகிறார். இந்தநிலையில் மாவட்ட மாணவர் அணி அமைப்பாளராக இருந்த திருவாசகம் தற்போது மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

Advertisment