ADVERTISEMENT

ஏன் சீக்கிரமா உத்தரவு போட்டீங்க... மோடியால் அப்செட்டான எடப்பாடி... அதிருப்தியில் அதிமுகவினர்!    

03:13 PM Apr 14, 2020 | Anonymous (not verified)


கரோனா தடுப்பு நடவடிக்கையாக மே 3-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக அறிவித்துள்ள பிரதமர் மோடி, இந்தக் காலகட்டத்தில் மக்கள் பின்பற்ற வேண்டிய ஏழு முக்கியமான கோரிக்கைகளை முன்வைத்துள்ளார். உலகம் முழுவதும் வேகமாகப் பரவிவரும் கரோனா வைரசால் இதுவரை 19 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ள சூழலில், 1.19 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். 4.5 லட்சம் பேர் வைரஸ் பாதிப்பிலிருந்து மீண்டு குணமாகியுள்ளார். தீவிரமாகப் பரவிவரும் கரோனா வைரஸ் காரணமாக உலகம் முழுவதும் முடங்கிப்போயுள்ள சூழலில், இந்தியாவில் இந்த வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்தைக் கடந்துள்ளது. இந்த வைரஸ் தொற்று காரணமாக இந்தியாவில் 300க்கும் மேற்பட்டோர் இதுவரை உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து ஊரடங்கை மே 3-ம் தேதி வரை நீட்டிப்பதாகப் பிரதமர் மோடி இன்று அறிவித்தார்.

ADVERTISEMENT


ADVERTISEMENT

இந்த நிலையில் நேற்று தமிழகத்தில் ஏப்ரல் 30-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது. ஏற்கனவே அமலில் இருந்த ஊரடங்கு உத்தரவு விதிமுறைகள் அப்படியே கடைபிடிக்கப்படும். மே மாதத்திற்கான ரேஷன் பொருள்கள் இலவசமாக வழங்கப்படும் எனத் தமிழக முதல்வர் தெரிவித்துள்ளார். எடப்பாடியின் இந்த ஊரடங்கு உத்தரவிற்கு சமூக வலைத்தளங்களில் விமர்சித்து வருகின்றனர். அதில் ஒடிசா, பஞ்சாப், மகாராஷ்டிரா, மேற்கு வங்கம் ஆகிய மாநில முதல்வர்கள் பிரதமர் அறிவிப்பு வெளியிடு, வரை காத்திருக்காமல் ஊரடங்கை முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து முன்கூட்டியே அறிவித்தனர். ஆனால் தமிழக முதல்வர் எடப்பாடி பாஜக அரசு அறிவிக்கும் என்று எந்த முடிவும் எடுக்காமல் இருந்தார். இதனால் தமிழக எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் நேற்று ஏப்ரல் 30 வரை ஊரடங்கு என்று அறிவித்தார். ஆனால் மோடி இன்று மே 3-ஆம் தேதி வரை ஊரடங்கு என்று அறிவித்துவிட்டார். இதனால் இன்னும் ஒரு நாள் ஊரடங்கு குறித்து அறிவிக்காமல் இருந்து இருந்தால் மோடியே கூறியிருப்பார் என்று சமூக வலைத்தளங்களில் எடப்பாடியின் இந்த ஊரடங்கு முடிவு குறித்து #WhoareyouEdappadi என்ற ஹேஷ்டேக்கை ட்ரெண்ட் செய்து வந்தனர். இதனால் அதிமுகவினர் அதிருப்தியில் இருப்பதாகச் சொல்லப்படுகிறது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT