ADVERTISEMENT

''எவ்வளவு சொல்லியும் கேட்கவில்லை...'' -எடப்பாடியை குறை சொன்ன ஓ.பி.எஸ்.

04:39 PM Apr 26, 2021 | rajavel

ADVERTISEMENT

மே 2ஆம் தேதி தேர்தல் முடிவுக்காக அனைத்து அரசியல் கட்சிகளும் தமிழகத்தில் காத்திருக்கின்றன. இதில் அதிமுகவே தேர்தல் முடிவுகளை ஆர்வமாக எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறது.

ADVERTISEMENT

தேர்தலுக்கு முன்பாக அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தமிழகம் முழுவதும் பிரச்சாரத்தில் ஈடுபட திட்டமிட்டிருந்தார். தேர்தல் பிரச்சாரத்திற்கு குறைவான நாட்களே இருப்பதாலும் தன்னை எதிர்த்து தங்கத்தமிழ்ச்செல்வன் போட்டியிடுவதாலும் போடியிலேயே அதிக கவனம் செலுத்தியுள்ளார்.

இதனிடையே தனக்கு வேண்டிய பத்திரிகையாளர்கள், முக்கிய நபர்களிடம் தேர்தல் முடிவு எப்படி வரும் என்று கேட்டுள்ளார். அதற்கு சிலர் அதிமுகவுக்கு சாதகமாக இல்லை என்று கூறியுள்ளனர். சிலர் மீண்டும் அதிமுக ஆட்சிக்கு வர வாய்ப்பு உள்ளது என்றும் கூறியுள்ளனர். அப்போது அவர்களிடம் தேமுதிக நம்ம கூட்டணியிலேயே இருந்திருக்கலாம், பேசி பேசிதான் அவர்களை குறைந்த தொகுதிகளில் போட்டியிட ஒப்புக்கொள்ள வைத்திருக்கலாம். அம்மா (ஜெ.) இருந்தபோது என்னிடம் தேர்தல் நேரங்களில் இதுபோன்ற விசயங்களை ஆலோசிப்பார். நான் அப்போது உள்ளதை உள்ளப்படியே சொல்லிவிடுவேன். ஆனால் இப்போது எவ்வளவு சொல்லியும் தேமுதிகவை கழட்டிவிட்டுவிட்டார்கள். பாஜக மேலிடம் சொல்லியே இவர்கள் கேட்கவில்லை என மனதில் இருப்பதை கொட்டியுள்ளார்.

மேலும் அவர்களிடம் பேசிய அவர், அதிமுக வெற்றிபெற வேண்டும் என்றால் கூட்டணி பலத்தை இழக்கக் கூடாது என சொன்னபோது, அதிமுக அரசு கொண்டு வந்த திட்டங்கள், சாதனைகளை சொல்லி வாக்கு கேட்போம் என்றார் எடப்பாடி. என்னிடம் சொன்னதுமாதிரியே அமித்ஷாவிடமும் சொல்லியிருக்கிறார். அப்போது அமித்ஷா, பின்னர் ஏன் நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணி படுதோல்வி அடைந்தது என கேட்டதற்கு எடப்பாடியால் பதில் சொல்ல முடியவில்லை.

ஆனால் இப்போது தனக்கு வேண்டிய உளவுத்துறை அதிகாரிகள் ஒரு லிஸ்ட் கொடுத்திருக்கிறார்கள். அதில் 130 தொகுதிகளில் அதிமுக வெற்றி பெறும் என, அவரை உடல்நலம் விசாரிக்க சென்றபோது கூறுகிறார். நிலைமை வேறு மாதிரி இருக்கிறது என அப்போது நான் சொன்னபோது, இப்படி பேசாதீங்க, கட்சியினர் உற்சாகம் இழுந்துவிடுவார்கள், வெளியே பேசும்போது அதிமுகவே மீண்டும் ஆட்சி அமைக்கும் என்று பேசுங்கள் என்கிறார். வேட்பாளர்கள் தேர்விலும், கூட்டணி அமைக்கும் விசயத்திலும் நான் சொன்னதை யோசித்து முடிவெடுத்திருந்தால் அவர் சொன்னதுபோல நம்பிக்கையாக இருந்திருக்கலாம்... என சொல்லி வருத்தப்பட்டாராம் ஓ.பி.எஸ்.!

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT