Edappadi Palanisamy statement about actor vijay speech

சேலம் மாவட்டம், ஆத்தூர் பகுதியில் இன்று மாற்றுக்கட்சியில் இருந்து விலகி அதிமுகவில் இணையும் நிகழ்வு நடைபெற்றது. அதில் பங்கேற்ற அதிமுக பொதுச்செயலாளர் இ.பி.எஸ். செய்தியாளர்களைச் சந்தித்தார்.

Advertisment

அப்போது செய்தியாளர்கள் அவரிடம், ‘விஜய் வாக்குக்கு பணம் பெற கூடாது என்கிறாரே அதனை எப்படி பார்க்கிறீர்கள்’ என்று கேட்டனர். அதற்கு பதில் அளித்த அவர், “ஒவ்வொருவருக்கும் கருத்து சொல்ல உரிமை உள்ளது. அதன் அடிப்படையில் விஜய் அவருடைய கருத்தை தெரிவித்துள்ளார்” என்றார்.

Advertisment

“அதிமுகவுக்கும் கொள்கை இருக்கிறது..” - இ.பி.எஸ்.