ADVERTISEMENT

பிரதமர் மோடி கூறிய 21 நாட்கள் முடக்கம் சரியா? கடுமையாக விமர்சித்த அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர்! 

11:52 AM Mar 27, 2020 | Anonymous (not verified)

கரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஏழை நாடுகள், வளர்ந்த நாடுகள் என வேறுபாடின்றி அனைத்து நாடுகளையும் புரட்டிப் போட்டுள்ளது இந்த வைரஸ். அந்தவகையில் உலகளவில் கரோனாவுக்குப் பலியானோர் எண்ணிக்கை 21 ஆயிரத்தைத் தாண்டியுள்ள சூழலில், இந்தியாவில் கரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 16 லிருந்து 17 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல் கரோனா உறுதி செய்யப்பட்டோரின் எண்ணிக்கையும் 694 லிருந்து 724 ஆக உயர்ந்துள்ளது. இதில் இந்தியர்கள் 677 பேர், வெளிநாட்டினர் 47 பேர் என மொத்தம் 724 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதிகபட்சமாக கேரளாவில் 137, மகாராஷ்டிராவில் 130, கர்நாடகாவில் 55 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களின் எண்ணிக்கையும் 43 லிருந்து 67 ஆக அதிகரித்துள்ளது.. மேலும் கொரோனா தொற்று காரணமாக தமிழ்நாடு முழுவதும் 21 நாட்கள் 144 தடை உத்தரவு அமலில் இருந்து வரும் நிலையில் மக்கள் நடமாட்டத்தை கண்காணிக்க போலீசார் முகக் கவசம் அணிந்து ரோந்து மற்றும் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

ADVERTISEMENT



இந்த நிலையில் திமுகவிற்கு அரசியல் ஆலோசனை வழங்கும் பிரசாந்த் கிஷோர் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு குறித்து பேசும் போது, இந்தியாவை 21 நாட்கள் முடக்கும் முடிவு சரியானதாக இருக்கலாம் ஆனால் 21 நாட்கள் என்பது கொஞ்சம் அதிகம் தான் என்றும் கூறியுள்ளார். அதோடு தேவையான பரிசோதனை, தனிமைப்படுத்துதல் மற்றும் சிகிச்சை நடவடிக்கைகள் இல்லாமல் 21 நாள் முடக்கத்தால் கரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கலாம் என்பதற்கு எந்தவித ஆதாரமும் இல்லை. பின்பு கோவிட்-19 நெருக்கடியைச் சமாளிக்க அதிகாரிகளின் தயார்நிலை தடுமாற்றமாக உள்ளதாகக் கூறியுள்ளார். மேலும் மோசமாக நிறைவேற்றப்பட்ட முடக்கம் அதன் இலக்கை அடையவில்லை என்றாலும், லட்சக்கணக்கான மக்களின் வாழ்வாதரத்தை நிச்சயம் சிதைத்து விடும் எனக் கூறியுள்ளார். இந்தக் கருத்துக்கு பலர் ஆதரவாகவும், எதிர்ப்பாகவும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT