ADVERTISEMENT

எடப்பாடிக்கு விசுவாசமாக இருந்த திமுகவினர்... ஆக்ஷன் எடுக்க தயாரான திமுக... கடும் கோபத்தில் ஸ்டாலின்!

01:32 PM Jan 09, 2020 | Anonymous (not verified)

ஊரக உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளால் அ.தி.மு.க.வினர் உற்சாகமடைந்த பகுதி என்றால் அது கொங்கு மண்டலம்தான். இதுபற்றி கொங்கு மண்டலத்தில் உள்ள சீனியர் தி.மு.க. உடன்பிறப்புகள் வேதனையோடு நம்மிடம் பேசியது...

"எம்.ஜி.ஆர். காலம் தொடங்கி இன்றுவரை கொங்கு மண்டலம் என்றால் அது அ.தி.மு.க.வின் கோட்டை என அக்கட்சியினர் கூறிவந்தனர். இது மறைந்த ஜெயலலிதா காலம் வரை பெரும்பாலும் அப்படித்தான் இருந்தது. தி.மு.க. இங்கு கொஞ்சம் பலவீனமான அமைப்பாகத்தான் இருந்தது. ஆனால் தலைவர் கலைஞர் மறைவிற்கு பிறகு தளபதி ஸ்டாலின், கட்சித் தலைமைப் பொறுப்புக்கு வந்து சந்தித்த, கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அ.தி.மு.க.வின் கோட்டையை தி.மு.க. சுக்கு நூறாக உடைத்தது என்பது உண்மைதான்.

ADVERTISEMENT



இந்த உள்ளாட்சித் தேர்தலில் தி.மு.க.வுக்கு எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி கிடைக்காததற்கு காரணம், முதலமைச்சரான எடப்பாடி பழனிச்சாமி மீது இந்த பகுதியில் உள்ள தி.மு.க. மாவட்ட செயலாளர்கள், முக்கிய நிர்வாகிகள் பலரும் பாசம் வைத்திருப்பதாகத்தான் தெரிகிறது. கட்சியின் வெற்றி மட்டுமே ஒரே நோக்கம் என்று உழைக்காமல் தேர்தலில் போட்டியிடுபவர்கள் அவர்களே தங்கள் வெற்றிக்காக உழைக்கட்டும் என ஒதுங்கி விட்டனர். இதனால்தான் இந்தப் பகுதியில் தி.மு.க. அதிகப்படியான தோல்வியை சந்தித்திருக்கிறது.

ADVERTISEMENT


கோவை, திருப்பூர், ஈரோடு, கரூர், சேலம், நாமக்கல், தர்மபுரி இந்த 7 மாவட்டங்களும் தி.மு.க.விற்கு ஏமாற்றத்தைக் கொடுத்துள்ளன. இதில் ஒரு ஆறுதலான விஷயம், ஈரோடு தெற்கு மாவட்டத்தில் கிடைத்த வெற்றிதான். மா.செ. சு.முத்துசாமியின் உழைப்பால் தெற்கு மாவட்டத்தில் உள்ள நான்கு மாவட்ட கவுன்சிலர் பதவிகளில் மூன்று தி.மு.க.வுக்கு வந்துள்ளது. அதேபோல் ஐந்து ஊராட்சி ஒன்றிய தலைவர் பதவிகளில் 3 தி.மு.க.வுக்கு வந்துள்ளது. தெற்கு மாவட்டத்தில் தி.மு.க. அ.தி.மு.க.வை விட கூடுதலாக வெற்றி பெற்றுள்ளது. ஆனால் இதே ஈரோடு மேற்கு மாவட்டத்தில் சொல்லும்படி எதுவுமே இல்லை. கட்சித் தலைமை இனிமேலாவது எடப்பாடி பழனிச்சாமி மீது பாசம் வைத்துள்ள தி.மு.க. நிர்வாகிகள் மீது கண் வைக்கும் என நம்புகிறோம்'' என்றனர்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT