தென்காசி மாவட்டம் புதிதாக உருவாக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, அவற்றின் தொடக்க விழா தென்காசியில் உள்ள இசக்கி மஹால் வளாகத்தில் நடைபெற்றது. அவற்றில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கலந்து கொண்டு ஆயத்தப் பணிகளை தொடங்கி வைத்தார்.

Advertisment

Edappadi Palanisamy

அதன் பின்னர் சிறப்புரை ஆற்றிய அவர், ஆம்புலன்ஸ் சேவையை கால் நடைகளுக்கும் கொண்டு வந்திருக்கிறோம். விவசாய குடிமக்களுக்காக எண்ணற்ற திட்டங்களை அதிமுக அரசு உருவாக்கியுள்ளது. அதுமட்டும் இல்லாமல் எட்டு ஆண்டுகளில் கல்வித் தரம் சிறக்க வேண்டும் என்பதற்காக 43,584 புதிய ஆசிரியர்களை நியமித்துள்ளது. புதிதாக 248 ஆரம்பப் பள்ளிகள் தொடங்கப்பட்டுள்ளன. 107 தொடக்கப்பள்ளிகள் நடுநிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டுள்ளன. 604 உயர்நிலை பள்ளிகள் மேல்நிலை பள்ளிகளாக தரம் உயர்த்தப் பட்டுள்ளன. இதனால் கல்வி கற்பவர்களின் எண்ணைக்கை உயர்ந்து தமிழகம் முதலிடத்தில் உள்ளது என தெரிவித்தார்.

eps

Advertisment

மேலும் 2006ல் தமிழகத்தில் திமுக ஆட்சியின் போது ஊரக மற்றும் உள்ளாட்த்துறை அமைச்சராக இருந்த ஸ்டாலின் 31-8-2006 அன்று சட்டமன்றத்திலே மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி தலைவர்களை நேரடியாக தேர்ந்தெடுக்கும் முறைக்கு பதிலாக மறைமுகமாக தேர்ந்தெடுக்கும் முறையை அறிமுகப்படுத்தினார். இன்று மறைமுகத் தேர்தல் கொண்டுவருவதை எதிர்க்கும் ஸ்டாலின்தான், அன்று மறைமுகத் தேர்தல் கொண்டுவரவேண்டும் என்று சட்டமன்றத்தில் அந்த தீர்மானத்தை கொண்டுவந்தார் என்று சாடினார்.

பின்னர் உள்ளாட்சி தேர்தல் நடக்க வேண்டும் என்பதுதான் அதிமுகவின் எண்ணம் என்று கூறிய அவர் தமிழகத்திற்கு பயன்தரும் மத்திய அரசு திட்டங்களை ஆதரிப்போம். அதே போல் மக்களை பாதிக்கக் கூடிய திட்டங்களை எதிர்ப்போம் என்று தெரிவித்தார்.