ADVERTISEMENT

பட்ஜெட்டை உற்றுப் பார்த்தால் அப்படித்தான்... பாஜகவை கடுமையாக விமர்சித்த தயாநிதி மாறன்... அதிருப்தியில் பாஜக!

11:01 AM Feb 17, 2020 | Anonymous (not verified)

இதற்கு முன் இரண்டு முறை எம்.பி.யாக இருந்தபோது அமைச்சராகவும் ஆளுங் கூட்டணி எம்.பி.யாகவும் இருந்தவர் தயாநிதி மாறன். இப்போது மூன்றாவது பெரிய கட்சியின் உறுப்பினர். நிதியமைச்சரையும், மோடி தலைமையிலான மத்திய அரசையும் போட்டுத் தாக்கிய அவருடைய நாடாளுமன்ற உரை சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவியது.

"எங்கள் தலைவர் கலைஞர் அவர்களின் வார்த்தைகளில் இந்த பட்ஜெட்டை விவரிக்க வேண்டும் என்றால், ஒய்யாரக் கொண்டையாம், தாழம்பூவாம். உள்ளே இருக்குமாம் ஈரும், பேனும்'. அதாவது, அழகான பெண் ஒருவர் நீளமான கூந்தலில் பூச்சூடி வருவார். அவரை சற்று உற்றுப் பார்த்தால்தான் கூந்தலில் மொய்க்கும் பேன்கள் கண்ணுக்குத் தெரியும்.

ADVERTISEMENT



பேன்களை ஆங்கிலத்தில் ‘"லைஸ்'’ என்று சொல்வார்கள். பொய்களையும் ஆங்கிலத்தில் ‘"லைஸ்'’ என்றே சொல்வார்கள். இந்த பட்ஜெட்டை உற்றுப் பார்த்தால் அப்படித்தான் "லைஸ்'’ உள்ளது. பட்ஜெட் தாக்கல் செய்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், "வரி செலுத்துவதற்கு நடுத்தர வருவாய் பெறும் மக்கள் ஆடிட் டரை பார்க்க செல்ல வேண்டாம், ஒரு கிளிக் செய்தால் போதும், எளிதாக வரி செலுத்திவிடலாம்' என கூறினார். ஆனால், எந்தப் பிரிவின் கீழ் நாங்கள் வரி செலுத்தவேண்டும் என்று தெரிந்துகொள்ளவே ஆடிட்டருக்கு கூடுதலாக பணம் செலுத்த வேண்டிய நிலைதான் உள்ளது.

புதிய வரிமுறையை எளிதாக விவரிக்க வேண்டும் என்றால், இப்போது 50 ரூபாய்க்கு விற்கும் மசால் தோசையின் விலை புதிய வரி விதிப்புக்கு ரூ.45 ஆகிறது. ஆனால் இந்த விலை நிபந்தனைக்கு உட்பட்டது என்கிறார் நிதியமைச்சர். அதாவது, உங்களுக்கு சாம்பார் வேண்டும் என்றால் கூடுதலாக ரூ.15, சட்னி வேண்டும் என்றால் கூடுதலாக ரூ.15 செலுத்த வேண்டும். ஆக, ரூ.50-க்கு கிடைத்த மசால்தோசையின் தற்போதைய விலை ரூ.80. இப்படித்தான் புதிய பட்ஜெட் உள்ளது.

இன்னொரு அபாயகரமான உண்மையை கூற விரும்புகிறேன். ஒருவர் ரூ.15 ஆயிரம் சம்பளம் பெற்றால், அவரது பாதுகாப்புக்கு பி.எப். பங்களிப்பு எடுக்கப்படுகிறது. இதற்கு வரி விலக்கு இருந்தது. ஆனால் புதிய முறையில் இந்த விலக்கு இல்லை.

எல்லோரும் எல்.ஐ.சி.யில் முதலீடு செய்யத்தான் தற்போது விரும்புகின்றனர். ஏனென்றால் அரசு உத்தரவாதம் இருக்கிறது. அதற்கு வருமானவரி விலக்கும் உள்ளது. ஆனால், தற்போது எல்.ஐ.சி. முதலீட்டுக்கு ஒன்றும் கிடைக்காது என அரசு கூறுகிறது.

இயற்கைப் பேரிடர் ஏற்பட்டால், கிடைக்கும் ஒரே தொலைத்தொடர்பு சேவை பி.எஸ்.என்.எல். ஏதாவது பாதிப்பு ஏற்பட்டால் ஏர் இந்தியா உள்ளது என நமது அமைச்சர்கள் பேசிய விளம்பர ஒலிநாடாக்கள் உள்ளன. சமீபத்தில் கூட கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட சீனா சென்று இந்திய மாணவர்களை, ஏர் இந்தியா விமானங்கள் மீட்டு வந்தன. ஆனால் அரசு தற்போது அவற்றை எல்லாம் விற்கிறது. இனி ஏதாவது பாதிப்பு ஏற்பட்டால் தனியார் விமானங் கள் செல்லுமா அல்லது ஜியோ தொலைத்தொடர்பு சேவை அளிக்குமா? எல்.ஐ.சி., ஏர் இந்தியாவை மட்டும் நிதியமைச் சர் விற்கவில்லை. பி.எஸ். என்.எல்., பி.பி.சி.எல். உட்பட பல நிறுவனங் களை அரசு விற்கிறது. தற்போது தேசிய நெடுஞ்சாலைகளையும் அரசு விற்கிறது. அதிக வசூல் செய்யும் மையங்களாக நெடுஞ் சாலைகள் மாற்றப்படுகின்றன. நாடாளுமன்றக் கட்டிடத்தையும் விற்றுவிடுங்களேன்.

வரிசெலுத்துவதில் பாகு பாடு இருக்காது என நிதியமைச்சர் கூறுகிறார். ஆனால் தமிழ்நாட்டில் என்ன நடக்கிறது? அடுத்த ஆண்டு தேர்தல் வரவுள்ள நிலையில், நடிகர் ரஜினிகாந்துக்கு ரூ.1 கோடி வரி நிவாரணம் கிடைக்கிறது. அதே சமயம் முகம் இல்லாத உங்கள் வரி அலுவலகம், நடிகர் விஜய்க்கு குறி வைக்கிறது. சமஸ்கிருதத்துக்கு கோடிக் கணக்கில் பணம் செலவழிக்கப் படுகிறது. ஆனால் செம்மொழி தமிழுக்கு எதுவும் செலவழிக்கப் படவில்லை'' என்ற அவருடைய அதிரடி உரை மக்களவையை உலுக்கவே செய்தது.

ADVERTISEMENT
ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT