தந்தை பெரியார்?பேரறிஞர் அண்ணா❤️கலைஞர்?❤️ ஆகியோர் பற்றிய உண்மைகள் உரக்க பேசுங்கள் Sir
அப்படியாவது பொய் பேசி,கொண்டு போட்டோஷாப் உலகில் வாழ்ந்து,தாமரை மலர்ந்தே தீறும் என்று மாய கனவு காணும் தோழர்களுக்கு தமிழர் நலனில் அக்கறை கொண்ட கட்சி திமு கழகம் மட்டும் தான் என்ற உண்மை உணரட்டும்? https://t.co/IgShlBTQZp
— Dr.Senthilkumar.S (@DrSenthil_MDRD) May 13, 2020
பிரதமர் மோடி தொலைக்காட்சியில் உரையாற்றும் போது, பல்வேறு திட்டங்கள் குறித்தும், ஊரடங்கு நீட்டிப்பு குறித்தும் பேசியிருந்தார். அதன்படி 20 லட்சம் கோடி ரூபாய்க்கு சிறப்புத் திட்டங்களை அறிவித்துள்ளார். இது பொருளாதாரத்தை மீட்டெடுக்க உதவும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் பொது முடக்கத்தை நீட்டிப்பதாகவும் அறிவித்துள்ளார். அந்த முடக்கம் எதுவரை தொடரும் என்று மே 18 ஆம் தேதிக்கு முன்பு அறிவிக்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார். மேலும் இந்த ஊரடங்கு இதுவரை செயல்பாட்டில் இருந்து வந்த ஊரடங்கை விட மாறுதலாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
window.googletag = window.googletag || {cmd: []};
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/nk_desktop_ap_display_mr_p3', [300, 250], 'div-gpt-ad-1584956668553-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.enableServices();
});
window.googletag = window.googletag || {cmd: []};
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/nk_mobile_ap_display_mr_p1', [300, 250], 'div-gpt-ad-1584957472633-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.enableServices();
});
இந்த நிலையில் பிரதமர் மோடி உரை குறித்து எதிர்க்கட்சிகள் பல்வேறு விமர்சனங்களைக் கூறிவருகின்றனர். எதிர்க்கட்சிகளின் விமர்சனத்துக்கு பாஜகவின் தேசிய செயலாளர் எச்.ராஜா தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து கூறியுள்ளார். அதில், தமிழன் பிரசன்னா, மனோ தங்கராஜ் போன்றவர்கள் மாண்புமிகு பிரதமர் அவர்களை இழிவாகப் பேசுவதை தி.மு.க. தலைவர் ஸ்டாலின் அவர்கள் கண்டிக்க வேண்டும். இல்லையேல் ஈ.வெ.ரா, அண்ணாதுரை மற்றும் கலைஞர் ஆகியோர் பற்றிய உண்மைகள் பா.ஜ.க.வினர் பேச வேண்டி வரும் என்று கூறியுள்ளார். எச்.ராஜாவின் இந்தக் கருத்துக்கு தருமபுரி தி.மு.க. எம்.பி டாக்டர்.செந்தில்குமார் பதிலடி கொடுத்துள்ளார். அதில், தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, கலைஞர் ஆகியோர் பற்றிய உண்மைகள் உரக்க பேசுங்கள் சார்... அப்படியாவது பொய் பேசி கொண்டு போட்டோஷாப் உலகில் வாழ்ந்து, தாமரை மலர்ந்தே தீறும் என்று மாயக் கனவு காணும் தோழர்களுக்கு தமிழர் நலனில் அக்கறை கொண்ட கட்சி தி.மு.கழகம் மட்டும் தான் என்ற உண்மை தெரியவரும்என்று பதிலடி கொடுத்துள்ளார்.