ADVERTISEMENT

திமுக பொதுக்குழு கூட்ட தேதி அறிவிப்பு...

12:01 PM Sep 01, 2020 | kirubahar@nakk…

ADVERTISEMENT

ADVERTISEMENT

திமுகவின் பொதுக்குழுக்கூட்டம் வரும் செப்டம்பர் ஒன்பதாம் தேதி நடைபெற உள்ளதாக திமுக தலைவர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

திமுக பொதுச்செயலாளர் மற்றும் பொருளாளர் பதவிக்கு யாரை நியமிப்பது என்பது குறித்த முடிவு இக்கூட்டத்தில் எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் ஒன்பதாம் தேதி காலை காணொளிக்காட்சி மூலமாக நடைபெறும் இக்கூட்டத்தில் பங்கேற்க திமுகவின் பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதனிடையே பொதுக்குழுக் கூட்டத்திற்கு முன்னதாக நாளை மறுநாள் திமுக மாவட்ட செயலாளர் கூட்டம் நடைபெற உள்ளது. மார்ச் 29ல் நடைபெறவிருந்த இந்த பொதுக்குழுக் கூட்டம், கரோனா பொது முடக்கத்தால் ஒத்திவைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT