ADVERTISEMENT

இரட்டை இலை, சூரியன் இடையே 8 தொகுதிகளில் நேரடி போட்டி.

01:37 PM Mar 17, 2019 | nagendran

அதிமுகவும், திமுகவும் தலா 20 தொகுதிகளில் போட்டியிட்டாலும் இரு கட்சிகளுக்கும் இடையே 8 தொகுதிகளில் தான் நேரடி போட்டி நிலவுகிறது. இதன்படி, சேலம், பொள்ளாச்சி, திருவண்ணாமலை, நீலகிரி, நெல்லை, மயிலாடுதுறை, காஞ்சிபுரம், தென்சென்னை ஆகிய 8 தொகுதிகளில் மட்டுமே திமுகவும், அதிமுகவும் நேரடியாக மோதுகிறது.

ADVERTISEMENT

ADVERTISEMENT

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியுடன் 2 தொகுதிகளிலும், விடுதலைச் சிறுத்தைகள், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, மதிமுக, ஐ.ஜே.கே ஆகிய கட்சிகளுடன் தலா ஒரு தொகுதிகளுடன் அதிமுக நேரடியாக போட்டி போடுகிறது.

அதேபோல், 7 தொகுதிகளில் போட்டியிடும் பாமக, திமுகவுடன் 6 தொகுதிகளிலும், ஒரு தொகுதியில் விடுதலைச் சிறுத்தைகளுடனும் மோதுகிறது. விடுதலைச் சிறுத்தைகள் வேட்பாளர் ரவிக்குமார் உதய சூரியன் சின்னத்தில் போட்டியிடுவதால், 7 தொகுதிகளிலும் மாம்பழத்திற்கும்-உதய சூரியனுக்கும் இடையே தான் போட்டி ஏற்பட்டுள்ளது.

5 தொகுதிகளில் களம் காணும் பிஜேபி, 2 தொகுதிகளில் காங்கிரசுடனும், திமுக, இந்திய கம்யூனிஸ்ட், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகளுடன் தலா ஒரு தொகுதியில் மோதுகிறது.

4 தொகுதிகளில் வேட்பாளர்களை களம் இறக்கும் தேமுதிக, 2 தொகுதிகளில் திமுகவுடனும், 2 தொகுதிகளில் காங்கிரசுடனும் மோதுகிறது. தென்காசியில் புதிய தமிழகம் கட்சியோடும், தஞ்சாவூரில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியோடும், வேலூரில் புதிய நீதிக்கட்சியுடனும் திமுக போட்டியிடுகிறது. புதுச்சேரியில் காங்கிரசும், என்.ஆர். காங்கிரசும் நேரடியாக மோதுகிறது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT