ADVERTISEMENT

நாங்கள் எடப்பாடிக்கு ஆதரவாகத்தானே செயல்பட முடியும். எப்படி எதிர்த்து செயல்பட முடியும்: திவாகரன் மகன் ஜெயானந்த்

08:33 AM May 03, 2018 | rajavel

ADVERTISEMENT


அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரனுக்கும், சசிகலாவின் சகோதரர் திவாகரனுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.


இதைத் தொடர்ந்து அம்மா அணி என்ற புதிய கட்சியை திவாகரன் தொடங்கியுள்ளார். அதற்கான செய்தித் தொடர்பாளர்களை நியமித்தார். மேலும் சென்னையில் விரைவில் கட்சி அலுவலகம் திறக்கப்படும் என்றும் கூறினார்.

ADVERTISEMENT

இந்தநிலையில் சென்னை ஈக்காடுதாங்கல் இல்லத்தில் திவாகரனின் மகன் ஜெயானந்த் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-


தினகரன் கட்சி தொடங்கியது குறித்து சசிகலாவுக்கு நாங்கள் சொல்லவில்லை. கட்சியில் எனக்கு எந்த பொறுப்பும் கிடையாது. மீண்டும் நாங்கள் டி.டி.வி. தினகரனுடன் இணைய மாட்டோம். அதற்கான எல்லை தாண்டி விட்டது. மீண்டும் இணைவோம் என்று கூறுவதை எல்லாம் நம்ப முடியாது.

அனைத்து மாவட்டங்களில் இருந்தும் தொடர்பு கொள்ளும் அனைவரும் கேட்கும் முதல் கேள்வி ஏன் இப்படிப்பட்ட ஒரு முடிவு? என்ன காரணம்? என்று கேட்கிறார்கள். அவர்களிடம் நாங்கள் விளக்குகிறோம். இப்போது தான் குழந்தை பிறந்து 3 நாட்கள் ஆகி உள்ளது. அம்மா அணியில் உண்மையாக இருந்தவர்கள் பலர் வந்து கொண்டு இருக்கிறார்கள். உண்மை சற்று காலதாமதமாகத் தான் தெரிய வரும். விரைவில் பலர் வருவார்கள்.


எடப்பாடி பழனிசாமியின் ஆட்சியில் பல குறைகள் இருக்கின்றன. ஒரு குறைபாடு உள்ள ஆட்சி தான். அதை மறுக்க இயலாது. அ.தி.மு.க.வில் இருக்கும் பலர் எங்களிடம் பேசிக் கொண்டு இருக்கிறார்கள். அதில் பலர் எம்.எல்.ஏ.க்களாக இருக்கிறார்கள். சிறையில் இருப்பவர் (சசிகலா) தற்போது தற்சமயம் யாருக்கும் ஆதரவு கொடுக்க முடியாது. சிறையில் இருப்பவர் இந்த முடிவை எடுத்து இருக்கிறார். அவர் சிறையில் இருந்து வந்த பிறகு தான் தெரியும்.

சசிகலா சிறைக்கு செல்லும் முன் எடப்பாடி பழனிசாமி தான் முதல்-அமைச்சர் என்று கூறிவிட்டு சென்றிருக்கிறார். அனைத்து எம்.எல்.ஏ.க்களையும் கூப்பிட்டு எடப்பாடியை நீங்கள் முழுமையாக ஆதரிக்க வேண்டும் என்று சத்தியம் வாங்கிக் கொண்டு சென்றிருக்கிறார். நாங்கள் எடப்பாடிக்கு ஆதரவாகத்தானே செயல்பட முடியும். நாங்கள் எப்படி எதிர்த்து செயல்பட முடியும். இவ்வாறு கூறினார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT