அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணைப் பொதுச்செயலாளரும்,ஆர்.கே நகர் சட்டமன்ற உறுப்பினருமானடிடிவி தினகரன் தஞ்சையில் பேசும்போது,

Advertisment

துரோகிகளின் வலையிலே நீங்கள் மாட்டிக்கொண்டால் எங்களால் காப்பாற்றமுடியாது, கட்சிக்கு கலங்கம் வரும் வகையிலே யார் நடந்துகொண்டாலும் நான் மன்னிக்கமாட்டேன். எனக்கு உறவு என்பது வேறு கட்சி என்பது வேறு.

Advertisment

ttv

நான் அமைதியானவன் அதேநேரத்தில் மிகவும் அழுத்தமானவன் எனவேஎந்த விஷயத்திலும் பின்வாங்க மாட்டேன். யாராக இருந்தாலும் கடும் நடடிக்கை எடுப்பேன், அதுபோல் எங்கள் கட்சியின்மீது சமூக வலைதளங்களில் தவறான கருத்துக்களை பரப்புவார்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனக்கூறினார்.

மேலும் இன்று தஞ்சை சுவாமிமலையில் செய்தியாளர்களை சந்தித்த டிடிவி.தினகரன் பேசுகையில்,காழ்ப்புணர்ச்சி காரணமாகவே திவாகரன் இவ்வாறு பேசி வருகிறார்.அவருக்கென்று சிலரை வைத்துக்கொண்டு பொய் பிரச்சாரம் செய்துவருகிறார் என கூறியுள்ளார்.

Advertisment