ADVERTISEMENT

’அவர்கள் காலத்தில் எதுவுமே விலை ஏறவில்லையா?'-அமைச்சர் கே.என்.நேரு பேட்டி

12:01 PM May 14, 2022 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

நேற்று சேலம் மாவட்டம் எடப்பாடியில் அதிமுக சார்பில் பெண்களுக்கான இலவச தையல் பயிற்சி பள்ளியை திறந்து வைத்த தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களைச் சந்தித்து பேசுகையில் ''தற்போதைய அரசுக்கு மக்கள் மீது கொஞ்சமும் அக்கறை இல்லை. ஆரம்பத்தில் சொத்துவரியை உயர்த்தினார்கள். பேருந்து கட்டணத்தை உயர்த்தியே ஆகவேண்டும் வேறு வழியே கிடையாது. நிதி ஆதாரத்தைப் பெருக்குவதற்கு எந்த திட்டத்தையும் இந்த அரசாங்கம் கொண்டுவந்ததாகத் தெரியவில்லை. விரைவில் பேருந்து கட்டணத்தையும் உயர்த்தியாக வேண்டும், மின்கட்டண கட்டணத்தை உயர்த்தியாக வேண்டும் ஏனென்றால் அவையெல்லாம் நஷ்டத்தில் இயங்கி வருகிறது. பால் விலையும் உயர இருக்கிறது. ஏற்கனவே எல்லா விலையும் உயர்ந்து போயிருக்கிறது. கட்டுமான பொருட்களின் விலை தாறுமாறாக அதிகரித்துள்ளது'' என்றார்.

இந்நிலையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு, ''எதிர்க்கட்சி ஆளுங்கட்சியை ஏதாவது குறைசொல்லவேண்டும் என்பதற்கு சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். நிதி மேலாண்மையை தமிழக முதல்வர் சரியாக செய்து வருகிறார். பால் கட்டணம், பேருந்து, மின் கட்டணங்கள் அதிகரிக்க இருப்பதாக அவர்கள் சொல்கிறார்கள் என்றால் அது நடக்கும்போதுதான் பார்க்கணும். கடந்த முப்பது நாற்பது ஆண்டுகாலமாக ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொன்று விலை ஏறிக்கொண்டுதான் இருக்கிறது. இவர்கள் காலத்தில் எதுவுமே ஏறவில்லையா? எங்களிடம் சிமெண்டு விலை என்னாச்சு கம்பி விலை என்னாச்சுனு கேக்குறாங்க... இவங்க இருந்த 10 வருடத்தில்தான் அது பலமடங்கு உயர்ந்தது. எனவே இயற்கை அந்த நேரத்தில் என்ன முடிவெடுக்குமோ அதுதான். நமது முதல்வர் மக்கள் பாதிக்காத அளவிற்கு முடிவெடுப்பார்'' என்றார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT