ADVERTISEMENT

கிரிமினல் கேபினெட் - மு.க.ஸ்டாலின் பேச்சு

03:05 PM Nov 14, 2018 | rajavel





சென்னை பல்லாவரத்தில் நடைபெற்ற திமுக முன்னோடி இல்லத் திருமணத்தை நடத்தி வைத்தார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்.

ADVERTISEMENT

அதனைத் தொடர்ந்து பேசிய அவர்,

ADVERTISEMENT

ஒரு காலத்தில் 1967-க்கு முன்பு இதுபோன்ற சீர்திருத்தத் திருமணங்கள் நடைபெறுகின்ற நேரத்தில் அது சட்டப்படி செல்லுபடியாகும் என்ற அங்கீகாரத்தை கூட தரமுடியாத நிலையில் தான் அந்த திருமணங்கள் நடந்தேறியிருக்கிறது.

ஆனால் தமிழ்நாட்டின் நடைபெற்ற தேர்தலில் திராவிட முன்னேற்ற கழகம் வெற்றி பெற்று ஆட்சிப் பொறுப்பை ஏற்றோம். ஆட்சிக்கு வந்து உடனடியாக ஏன் முதன்முதலாக முதலமைச்சராக நம்முடைய அறிஞர் அண்ணா அவர்கள் அந்தப் பொறுப்பை ஏற்றுக்கொண்டு முதலமைச்சர் என்ற அந்த உரிமையோடு, முறையோடு சட்டமன்றத்திற்குள்ளே நுழைந்து அந்த சட்டமன்றத்தில் ஏகமனதாக ஒரு தீர்மானத்தைக் கொண்டுவந்து நிறைவேற்றி தந்தார்கள்.

அண்ணா அவர்கள் முதலமைச்சர் வந்து உடனடியாக நிறைவேற்றிய தீர்மானம் மூன்று தீர்மானங்கள் ஏகமனதாக ஒரு தீர்மானம் இருமொழிக் கொள்கை, இன்னொரு தீர்மானம் இந்த தமிழ்நாட்டிற்கு தமிழ்நாடு என்று பெயர் சூட்டக்கூடிய தீர்மானம், மூன்றாவது தீர்மானமாக சீர்திருத்த திருமணங்கள் அனைத்தும் சட்டப்படி செல்லுபடியாகும் என்ற அந்த தீர்மானத்தை நிறைவேற்றி தந்தார்கள். இன்றைக்கு நடைபெற்றிருக்கக் கூடிய இந்த சீர்திருத்தத் திருமணம் முறைப்படி, சட்டப்படி செல்லுபடியாகும் என்ற அங்கீகாரத்தோடு நடந்தேறியிருக்கிறது.

நான் எண்ணிப் பார்க்கிறேன் திராவிட முன்னேற்றக் கழகம் இன்றைக்கு இந்த அளவிற்கு வளர்ந்து கம்பீரமாக நின்று கொண்டிருக்கிறது என்று சொன்னால் இளைஞர்களால்தான் இந்த இயக்கம் இன்றைக்கு கம்பீரமாக நின்று கொண்டிருப்பதை யாரும் மறுத்திட மறைத்திட முடியாது.

நாட்டில் இன்றைக்கு இருக்கக்கூடிய பிரச்சனைகளையும் தயவு கூர்ந்து நீங்கள் மறந்துவிடக்கூடாது, மத்தியில் ஒரு ஆட்சி நடக்கிறது, மாநிலத்தில் ஒரு ஆட்சி நடந்துகொண்டிருக்கிறது. இரண்டு தினங்களுக்கு, முன்பு ஆந்திர மாநிலத்தினுடைய முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு அவர்கள் சென்னைக்கு வந்து என்னை சந்திக்கின்ற நேரத்தில், என்னை சந்தித்துவிட்டு வெளியே வந்து பத்திரிக்கையாளர்களை சந்திக்கிற போது, அவரிடத்தில் கேட்கிறார்கள். தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய ஆட்சியைப் பற்றி சொல்லுங்கள் என்று, ஒரே வரியிலே சொன்னார். ‘ஆட்சி என்ற ஒன்று இருக்கிறதா?, என்று கேட்டார். இதைவிட கேவலம் – வெட்கம் இந்த ஆட்சிக்கு தேவையில்லை. காரணம் ஒரு “கிரிமினல் கேபினெட்” தமிழ்நாட்டில் நடந்துகொண்டிருக்கிறது.

முதலமைச்சர் சி.பி.ஐ விசாரணையில் சிக்கியிருக்கிறார். துணை முதலமைச்சர் இன்றைக்கு பல குற்றச்சாட்டுகளில் சிக்கியிருக்கிறார். நீதிமன்றத்தில் இன்றைக்கு பதில் சொல்ல வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகியிருக்கிறார். அதேபோல், அமைச்சர்கள் வரிசையை எடுத்துப் பார்த்தீர்கள் என்று சொன்னால் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர், குட்கா புகழ், இப்பொழுது குட்கா புகழ் என்று சொல்லமுடியாது டெங்கு புகழ் அந்த அளவிற்கு பெரிய பட்டங்களை பெற்றிருக்கக்கூடிய அமைச்சர் அவர் வருமான வரித்துறையிடம் சிக்கியிருக்கிறார். அதற்கடுத்தது தங்கமணி, வேலுமணி இப்படி பல அமைச்சர்கள். ஒரு கிரிமினல் கேபினெட் அமைந்துள்ளது. இந்த ஆட்சி என்றைக்கு ஒழியும் என்று மக்கள் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கிறார்கள்.

இந்த ஆட்சி இன்றைக்கு தப்பித்து நிலைத்திருப்பதற்கு காரணம் என்னவென்று கேட்டீர்களானால், மத்தியில் இருக்கின்ற ஆட்சி. ஏனென்றால், மத்தியில் இருப்பவர்கள் செய்யக்கூடிய காரியத்தை எதைப்பற்றியும் கவலைப்படப்போவதில்லை, நீட் பிரச்சனையா கவலை இல்லை, இந்தியை திணிக்கவேண்டுமா கவலையில்லை. எது வேண்டுமானாலும் செய்து கொள்ளுங்கள் என்று ஓப்பனாக விட்டிருக்கிறார்கள், அந்த நிலையில் தான் தமிழ் நாட்டில் இருக்கக்கூடிய ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. இவ்வாறு பேசினார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT