ADVERTISEMENT

தேர்தலுக்குத் தயாராகும் காங்கிரஸ்; கட்சியில் நடந்த அதிரடி மாற்றங்கள்

02:31 PM Jun 10, 2023 | prabukumar@nak…

ADVERTISEMENT

கோப்பு படம்

ADVERTISEMENT

கடந்த மே மாதம் நடந்து முடிந்த கர்நாடக மாநில சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைக் கைப்பற்றியது. அதனைத் தொடர்ந்து சித்தராமையா முதல்வராகவும், டி.கே.சிவகுமார் துணை முதல்வராகவும் பதவியேற்றுக் கொண்டனர். இந்நிலையில் கர்நாடக தேர்தல் முடிவானது காங்கிரஸ் கட்சியினருக்கு புதிய உத்வேகத்தை அளித்துள்ளது.

மேலும் இந்த ஆண்டின் இறுதியில் நடைபெற உள்ள ராஜஸ்தான், தெலுங்கானா, மத்தியப் பிரதேசம், சட்டீஸ்கர் மற்றும் மிசோரம் ஆகிய 5 மாநில சட்டமன்றத் தேர்தலில் கவனம் செலுத்தும் விதமாகப் பல்வேறு நடவடிக்கைகளை காங்கிரஸ் எடுத்து வருகிறது. வரும் நாடாளுமன்றத் தேர்தலையும் கவனத்தில் கொண்டு செயல்பட்டு வருகிறது. சமீபத்தில் மத்திய பிரதேச காங்கிரஸ் நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம் ஒன்றையும் நடத்தி இருந்தது.

இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் கே,சி. வேணுகோபால் வெளியிட்டுள்ள அறிக்கையில், "குஜராத் காங்கிரஸ் கட்சிக்கு புதிய தலைவராக சக்திசிங் கோகில் நியமனம் செய்யப்பட்டு இருக்கிறார். புதுச்சேரி காங்கிரஸ் தலைவராக வைத்திலிங்கம் எம்.பி. நியமனம் செய்யப்பட்டு உள்ளார். மும்பை மண்டல காங்கிரஸ் தலைவராக காங்கிரஸ் பெண் எம்எல்ஏ வர்ஷா கெய்க்வாட் புதிய தலைவராக நியமிக்கப்பட்டு இருக்கிறார். ஹரியானா மற்றும் டெல்லி மாநில காங்கிரஸ் பொறுப்பாளராக தீபக் பாபாரிய நியமிக்கப்பட்டுள்ளார்" எனத் தெரிவித்துள்ளார்.

கட்சியில் நிர்வாக ரீதியாகப் பலப்படுத்தும் விதமாக பல்வேறு அதிரடி மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வெளியிட்டுள்ள அறிவிப்பில், “மன்சூர் அலிகான் அகில இந்திய காங்கிரஸ் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் இவர் தெலுங்கானா காங்கிரஸ் அகில இந்திய பொறுப்பாளராகவும் செயல்படுவார். அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் பி.சி. விஷ்ணு நாத் கர்நாடகா மாநில காங்கிரஸ் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு, தெலுங்கானாவின் புதிய பொறுப்பாளராக நியமிக்கப்பட்டு உள்ளார். தெலுங்கானா மாநில பொறுப்பாளர் பதவியில் இருந்த என்.எஸ். போசராஜு, நதீம் ஜாவேத் ஆகியோர் அந்த பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்" எனத் தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT