Skip to main content

"என்னை பாதுகாக்க  அம்பேத்கரின் அரசியல் சாசனம் உள்ளது" - மல்லிகார்ஜுன கார்கே

Published on 09/05/2023 | Edited on 09/05/2023

 

congress mallikarjuna khargey talks about his politcial life childhoood and his family 

 

கர்நாடக சட்டமன்றத் தேர்தலுக்காக கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக அனல் பறந்த தேர்தல் பிரச்சாரம் நேற்றுடன் முடிவுக்கு வந்துள்ளது. 224 தொகுதிகளைக் கொண்ட கர்நாடகா மாநில சட்டமன்றத்திற்கு நாளை (10.05.2023) சட்டமன்ற பொதுத் தேர்தல் நடைபெறவுள்ளது. தற்போது ஆட்சியிலிருக்கும் பாஜக, எதிர்க்கட்சியான காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆகிய கட்சிகள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டன. நாளை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், நேற்றுடன் அங்கு தேர்தல் பிரச்சாரம் முடிவடைந்தது. இதையொட்டி பல்வேறு அரசியல் கட்சியினரும் தீவிரமாக தங்கள் இறுதிக்கட்ட தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொண்டனர்.

 

காங்கிரஸ் - பாஜக - மதச்சார்பற்ற ஜனதா தளம் என மும்முனை போட்டி அங்கு நிலவுகிறது. அதோடு அடுத்தாண்டு நாடாளுமன்றத் தேர்தல் வருவதால் காங்கிரஸ், பாஜக என இரு தேசிய கட்சிகளுக்கும் கர்நாடகத் தேர்தல் ஒரு வெள்ளோட்டமாக பார்க்கப்படுகிறது. தேர்தல் பிரச்சாரம் நேற்று மாலையுடன் முடிவுக்கு வந்த நிலையில் நாளை பதிவாகும் வாக்குகள் வரும் 13 ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கின்றன.

 

கடந்த 6 ஆம் தேதி காங்கிரஸ் கட்சி தனது ட்விட்டர் பக்கத்தில், கர்நாடகா மாநிலம் சித்தப்பூர் தொகுதி பாஜக வேட்பாளர் மணிகாந்த் ரத்தோட் பேசும் ஆடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தது. மல்லிகார்ஜுன கார்கே மற்றும் அவரது குடும்பத்தை அழித்து விடுவேன் என மணிகாந்த் ரத்தோட் பேசுவது போல் அந்த ஆடியோவில் இருந்தது. இந்த ஆடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட காங்கிரஸ், மணிகாந்த் ரத்தோட் மீது 40 கிரிமினல் வழக்குகள் நிலுவையில் உள்ளது என அவர் மீது மீதுள்ள வழக்குகளையும் பட்டியலிட்டு இருந்தது. மேலும் இதுகுறித்து பேசிய காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா, “மல்லிகார்ஜுன் கார்கே மற்றும் அவரது குடும்பத்தினரை கொலை செய்ய பாஜக தலைவர்கள் இப்போது சதித்திட்டம் தீட்டி வருகின்றனர். சித்தாப்பூர் தொகுதி பாஜக வேட்பாளர் பதிவில் இருந்து இது தெளிவாகிறது” என தெரிவித்திருந்தார்.

 

congress mallikarjuna khargey talks about his politcial life childhoood and his family 

 

இந்நிலையில் கர்நாடக மாநில சட்டப்பேரவை தேர்தல் பிரசாரத்தில் காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே நேற்று (08.05.2023) தனது சொந்த ஊரான கலபுர்கியில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து இறுதிக்கட்ட பிரசாரம் மேற்கொண்டிருந்த போது பேசுகையில், "என்னையும், எனது குடும்பத்தினரை கொலை செய்வதாக பாஜக வேட்பாளர் பேசியுள்ளார். இவரின் இந்த பேச்சானது பாஜக தலைவர்களின் மனதில் தோன்றி இருக்க வேண்டும். இல்லாவிட்டால் வேறு யாருக்கு கார்கே குடும்பத்தை அழிக்க இத்தகைய தைரியம் வரும். அவரின் இந்த மிரட்டலுக்கு பின்னணியில் சில பாஜக தலைவர்கள் இருக்க வேண்டும். இல்லாவிட்டால் இது போன்ற மிரட்டல் வந்திருக்காது.

 

என்னை பாதுகாக்க அம்பேத்கரின் அரசியல் சாசனம் உள்ளது. எனக்கு ஆதரவாக கலபுர்கி மக்களும் கர்நாடக மக்களும் உள்ளனர். நான் காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவராக பொறுப்பேற்ற பிறகு எனக்கு ஆதரவாக இந்திய மக்களும் இருக்கிறார்கள். என்னையும்  எனது குடும்பத்தினரையும் அழித்தால் எனது இடத்திற்கு வேறு நபர் வருவார். நானும் எனது மகனும் பாஜக தலைவர்களுக்கு எதிராகப் பேசுவதால் எங்களை அழிக்கத் திட்டமிடுகிறார்கள். பிரதமர் மோடியும் அதே போல் தான் நடந்து கொள்கிறார். பிரதமர் மோடி, என்னை பற்றி நீங்கள் பேசுங்கள். அது சரி. ஆனால், எனது மகனை பற்றி பேசுவது ஏன். எனது மகன் உங்களுக்கு சமமானவர் இல்லை. நான் கடந்த 52 ஆண்டுகளாக அரசியலில் உள்ளேன். ஆனால் எனது குடும்பத்தினரை எதற்காக இழுக்கிறீர்கள். நான் சிறு வயதாக இருந்தபோது ஒட்டுமொத்தமாக எனது குடும்பத்தினரை இழந்து தனியாக நின்றேன்.

 

நான் இன்னும் உயிரோடு தான் இருக்கிறேன். மக்களின் ஆசியுடன் நாங்கள் தொடர்ந்து வாழ்வோம். பாஜகவினர் என்ன நினைக்கிறார்களோ அதை செய்யட்டும். நானும் வலுவாக தான் உள்ளேன். எனக்கு தற்போது 81 வயது ஆகிறது. நான் இன்னும் 8 முதல் 10 ஆண்டுகள் உயிருடன் இருக்க வாய்ப்பு இருக்கிறது. அதற்கு முன்பு என்னை நீங்கள் கொலை செய்ய விரும்பினால் அதைப் பற்றி நான் கவலைப்படவில்லை. உங்களின் பிரச்சனை தீரும் என்றால் என்னை கொல்லுங்கள். நான் அதற்கும் தயாராக உள்ளேன். ஆனால் எனது உயிர் மூச்சு உள்ளவரை ஏழை மக்களின் நலனுக்காக தொடர்ந்து பாடுபடுவேன்" என்று பேசினார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'விசாரணையை சந்தியுங்க'-மீண்டும் மீண்டும் கொட்டுப்பட்ட ஹெச்.ராஜா!

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
' inquiry'-repeatedly dumped by H.Raja

தன் மீதான வழக்கை ரத்து செய்ய வேண்டும் எனப் பாஜக நிர்வாகி ஹெச்.ராஜா தொடர்ந்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

தமிழக பாஜக நிர்வாகியான ஹெச்.ராஜா கடந்த 2018 ஆம் ஆண்டு பெண்கள் குறித்து டிவிட்டர் வலைத்தளத்தில் சர்ச்சைக்குரிய கருத்து ஒன்றைப் பதிவிட்டு இருந்தார். இது தொடர்பாக முன்னாள் அமைச்சர் அந்தியூர் செல்வராஜ்  உட்பட திமுகவின் முக்கிய நிர்வாகிகள் ஈரோடு மாவட்ட காவல்துறையில் ஹெச்.ராஜா மீது புகார் அளித்திருந்தனர். இது தொடர்பாக  ஈரோடு டவுன் காவல் நிலைய போலீசார் பெண்களுக்கு எதிராக ஆபாசமாக பேசுதல்; பொது அமைதியைச் சீர்குலைக்கும் வகையில் செயல்படுதல்; கலவரத்தை ஏற்படுத்தும் நோக்கில் செயல்படுதல் உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் ஹெச்;ராஜா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கு ஈரோடு மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. தொடர்ந்து இந்த வழக்கு சென்னை மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் உள்ள சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. இந்நிலையில், இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி ஹெச்.ராஜா சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் வழக்கை மூன்று மாதத்திற்குள் முடிக்க சிறப்பு நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் சிறப்பு நீதிமன்றத்தில் தன் மீது விசாரணையில் வழக்கை ரத்து செய்யக்கோரி மீண்டும் சென்னை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு இன்று நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது 'அந்தச் சர்ச்சைக்குரிய பதிவை பதிவிட்டது நீங்களா?' என ஹெச்.ராஜா தரப்புக்கு கேள்வி எழுப்பினார். அதற்கு ஹெச்.ராஜா தரப்பு வழக்கறிஞர் ஆம் எனப் பதிலளித்தார். தொடர்ந்து ஹெச்.ராஜா மீதான இந்த வழக்கை ரத்து செய்ய முடியாது என உத்தரவிட்ட நீதிபதி விசாரணையை சந்திக்க வேண்டும் என உத்தரவிட்டு ஹெச்.ராஜா தரப்பு மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

Next Story

தடுமாறிய ஹெலிகாப்டர்; உயிர் தப்பிய அமித்ஷா

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
nn

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதனையடுத்து 13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவைத் தொகுதிகளில் நேற்று முன்தினம் (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. மொத்தம் 28 தொகுதிகள் கொண்ட கர்நாடகா மாநிலத்தில் ஏப்ரல் 26 ஆம் தேதி 14 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது. மே 7 ஆம் தேதி மற்ற 14 தொகுதிகளில் தேர்தல் நடைபெறவிருக்கிறது.

தேர்தல் நடைபெற இருக்கும் மாநிலங்களில் தேர்தல் பரப்புரைகள் களை கட்டியிருக்கும் நிலையில் பீகாரில் அமித்ஷா சென்ற ஹெலிகாப்டர் சில நிமிடங்கள் தடுமாறியது பரபரப்பை ஏற்படுத்தியது. சில நிமிடங்கள் கட்டுப்பாட்டை இழந்து தடுமாறி அலைந்த ஹெலிகாப்டர் பின்னர் சில நிமிடங்களுக்கு பிறகு மீண்டும் நிலைநிறுத்தப்பட்டு இயல்பு நிலைக்கு திரும்பி மீண்டும் அங்கிருந்து புறப்பட்டது. இந்தச் சம்பவத்தால் அங்கு சில நிமிடங்கள் பரபரப்பு ஏற்பட்டது.