ADVERTISEMENT

காங்கிரஸ் கட்சிக்கு புதிய தலைவர்?

05:17 PM Jun 27, 2019 | Anonymous (not verified)

காங்கிரசுக்கு நேரு குடும்பத்தைத் தாண்டி இப்ப தலைமையேற்க சரியான ஆளு யாரு இருக்கானு அரசியல் பார்வையாளர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். ராஜீவ் கொல்லப்பட்ட சமயத்தில் மாற்றுத் தலைமைகள் உருவானாலும், சோனியா தலைமை ஏற்ற பிறகுதான் காங்கிரஸால் ஆட்சியைப் பிடிக்க முடிஞ்சிது. இருந்தாலும் இப்போதைய நிலையில், புதிய தலைவரைத் தேர்வு செய்வதில் காங்கிரஸ் கட்சி மும்முரம் காட்டுது. மன்மோகன்சிங்கை தலைவர் பொறுப்பை ஏற்கும்படி ராகுல் கேட்டப்ப, கட்சி சுமையை சுமக்கும் வலிமை எனக்கில்லைன்னு நழுவிட்டார்.

ADVERTISEMENT


ADVERTISEMENT


இப்ப புதிய தலைவருக்கான ரேஸில், ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலட், ம.பி. முதல்வர் கமல்நாத், மாஜி ராணுவ மந்திரி ஏ.கே. அந்தோணி, கட்சியின் சீனியரான குலாம்நபி ஆசாத், தமிழ்நாட்டின் ப.சிதம்பரம் உள்ளிட்ட 11 பேர் இருக்காங்க. விரைவில் மகாராஷ்டிரா, அரியானா, ஜார்கண்ட் மாநிலங் களுக்கான சட்டமன்றத் தேர்தல் நடக்க இருப்பதால், அதற்குள் ஒரு புதிய தலைவரைத் தேர்ந்தெடுத்து கட்சியை பலப்படுத்தணுங்கிற வேகம், காங்கிரஸ் சீனியர்கள்ட்ட தெரியுது. ஆகையால் வெகு விரைவில் காங்கிரஸ் கட்சிக்கு புதிய தலைவர் வருவார் என்று அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT