நேற்று நாடாளுமன்றத்தின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரை நிகழ்த்தினார். பாகிஸ்தானின் பாலகோட்டில் நடைபெற்ற வான்வழித் தாக்குதல் தொடர்பாக நமது விமானப்படை வீரர்களை குடியரசு தலைவர் பாராட்டினார். அப்போது பிரதமர் மோடி உள்பட அனைத்து எம்பிக்களும் மேஜையை தட்டி ஆராவாரம் செய்தனர்.

Advertisment
Advertisment

congress

காங்கிரஸ் அணியில் இருந்த சோனியா காந்தியும் குடியரசு தலைவர் உரைக்கு மேஜையை தட்டி வீரர்களின் வீரத்தை பாராட்டினார். அந்த நேரத்தில் சோனியாவின் கையைப் பிடித்து ராகுல் இழுக்கும் காட்சி தொலைக்காட்சி மற்றும் சமூக ஊடகங்களில் வைரலாகி பரவி வருகிறது. மேலும் குடியரசு தலைவர் உரையின் போது மொபைல் போன் பார்த்ததாகவும் ஒரு சர்ச்சை எழும்பியது. குடியரசுத் தலைவர் உரையின் போது மேஜையைத் தட்டிய சோனியாவின் கையை ராகுல் காந்தி இழுத்தது குறித்து கடும் விமர்சனம் எழுந்துள்ளது.