ADVERTISEMENT

கூட்டணி கணக்கில் தவறு... மாறி மாறி கொட்டிக்கொள்ளும் அதிமுக - பாஜக!

11:18 AM Jul 07, 2021 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

கடந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக பெரும்பான்மையுடன் வெற்றிபெற்று ஆட்சி அமைத்துள்ள நிலையில், அதிமுக அதிகாரப்பூர்வ எதிர்க்கட்சியாக தன்னை நிலைநிறுத்திக்கொண்டது.

இந்நிலையில், அதிமுக ஆட்சிக்கு வர வேண்டும் என்று மக்கள் நினைத்தனர். ஆனால் கூட்டணி கணக்கு சரியில்லாததால் தோல்வியடைந்தோம் என முன்னாள் சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகம் தெரிவித்துள்ளார். விழுப்புரம் மாவட்டம் வானூரில் நடைபெற்ற அதிமுக கூட்டத்தில் பேசிய அவர், "அதிமுக ஆட்சி வர வேண்டும் என்றுதான் மக்கள் நினைத்தனர். ஆனால் கூட்டணி கணக்கு சரியில்லை, இதனால் சிறுபான்மையினரின் வாக்குகளை இழந்தோம். பாஜகவுடன் கூட்டணி வைக்காமல் இருந்திருந்தால் சிறுபான்மை வாக்குகளை முழுமையாக எடுத்திருக்கலாம்" எனக் கூறியிருந்தார்.

இந்நிலையில் ''உங்களால்தான்'' என்ற எண்ணம் எங்களிடமும் உண்டு... என அதிமுகவுடன் கூட்டணி வைத்ததால்தான் பாஜக தோல்வியடைந்தது என பாஜகவின் மாநில பொதுச் செயலாளர் கே.டி. ராகவன் ட்விட்டரில் தெரிவித்துள்ளார். இப்படி உங்களால்தான் நாங்கள் தோல்வியை சந்தித்தோம் உங்களால்தான் நாங்கள் சந்தித்தோம் என மாறி மாறி இருவரும் (அதிமுக - பாஜக) கொட்டிக்கொள்வது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காரணம், வருகின்ற உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக - பாஜக கூட்டணி தொடருமா என்ற கேள்விக்கு இதுகுறித்து தலைமைதான் முடிவு செய்யும் என ஏற்கனவே தமிழக பாஜக தலைவர் கூறியிருந்தார். தற்போது அதிமுக - பாஜக கூட்டணியில் இப்படி ஒரு பனிப்போர் தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT