ADVERTISEMENT

தமிழக எம்.எல்.ஏ.க்களை குறிவைத்த பாஜக!காங்கிரஸ்,திமுக அதிர்ச்சி!

11:51 AM Jul 16, 2019 | Anonymous (not verified)

இந்தியா முழுவதும் இருக்கும் அதிருப்தி எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்களை தங்கள் பக்கம் இழுக்க பாஜக காய் நகர்த்தி வருகிறது. தமிழ்நாட்டில் இருக்கும் 8 காங்கிரஸ் எம்.எல். ஏ.க்களில் 6 பேரை தங்கள் பக்கம் இழுத்து தமிழக காங்கிரஸை பலவீனப்படுத்தணும்னு பா.ஜ.க. கணக்குப் போடுது. இதன் மூலம் சட்டசபையில் தங்கள் குரலை எழுப்பலாம் என்பதோடு, அ.தி.மு.க. அமைச்சரவையிலும் பங்கெடுக்கலாம்ன்னு பா.ஜ.க. நினைக்கிறது. அதனால் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களோடு டீலிங் பேசிட்டு இருக்காங்கனு அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர். அவங்களுக்கு அமைச்சர் பதவி வாங்கி தருகிறோம்னு ஆசை காட்டி வருவதாக சொல்லப்படுகிறது.

ADVERTISEMENT

ADVERTISEMENT




இதனால் இப்பவே மூன்று காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் பா.ஜ.க. பக்கம் தாவ ரெடியாயிட்டாங்களாம். இன்னும் மூணு பேரை வளைச்சதும் பா.ஜ.க.வின் பவர் ஆட்டம் இங்க ஆரம்பிக்குமாம். இதற்காக ஆடிட்டர் குருமூர்த்தியும் துணை முதல்வர் ஓ.பி.எஸ்.சும் ஜரூரா களமிறங்கி ரூட் போட்டுக்கிட்டு இருக்காங்களாம். இந்த சட்டமன்றக் கூட்டத் தொடரிலேயே சட்ட சபைக்குள் நுழைய முடியுமான்னு பா.ஜ.க. பகீரதப் பிரயத்தனங்கள்ல இறங்கியிருக்கு. பாஜகவின் இந்த திட்டத்தை கேட்ட காங்கிரஸ் மற்றும் திமுகவினர் சற்று அதிர்ச்சியில் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT