ADVERTISEMENT

சின்ன பசங்க லீவு விடச்சொல்லி அழுகிற மாதிரி அழுதுகிட்டு... திமுக மீது பாஜகவின் எஸ்.வி.சேகர் சர்ச்சை கருத்து!

12:18 PM Apr 16, 2020 | Anonymous (not verified)


கரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் மே மாதம் 3- ஆம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார். இருந்தபோதிலும் இந்தியாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 11,933- லிருந்து 12,380 ஆக உயர்ந்துள்ளது. இதில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 392- லிருந்து 414 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல் கரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 1,344- லிருந்து 1,489 ஆக அதிகரித்துள்ளது.அதிகபட்சமாக மகாராஷ்டிரா மாநிலத்தில் 2,916 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளன. இதில் 295 பேர் கரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ள நிலையில், 187 பேர் உயிரிழந்துள்ளனர். அதேபோல் டெல்லியில் 1,578, தமிழகத்தில் 1,242, ராஜஸ்தானில் 1,023, மத்திய பிரதேசத்தில் 987, உத்தரப்பிரதேசத்தில் 735, தெலங்கானாவில் 647, கேரளாவில் 388, ஆந்திராவில் 525, குஜராத்தில் 766, கர்நாடகாவில் 279 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

ADVERTISEMENT



இந்த நிலையில் நடிகரும், அரசியல்வாதியுமான எஸ்.வி.சேகர் தனது ட்விட்டர் பக்கத்தில் திமுக-வைப் பற்றி கடுமையாக விமர்சித்துள்ளார். அதில், ஆட்சி செய்யும் அரசுக்கும், அரசியல் செய்யும் எதிர்க்கட்சிக்கும் வித்தியாசம் தெரியாதா? சட்டமன்றம் நடக்கும் போது சின்ன பசங்க பள்ளிக்கூடத்துக்கு லீவு விடச்சொல்லி அழுகிற மாதிரி அழுதுகிட்டு, இப்போ என்ன மக்கள் மேல அக்கரை? நீங்க சும்மா இருந்தாலே நாட்டுல எல்லாம் நல்லா நடக்கும். வெத்து அரசியல் DMK என்றும், அரசுக்கு இணையாக நிவாரணப்பொருட்களை அனைத்து மாவட்டம், கிராமப்பகுதி உள்பட அதிகமான சேவை செய்வது (RSS-க்கு இணையாக) ரஜினி மக்கள் மன்றத்தினர் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT