ADVERTISEMENT

நடிகர் ரஜினிக்காக வாதாட தயார்... பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி அதிரடி பேச்சு!

12:22 PM Jan 21, 2020 | Anonymous (not verified)

சென்னையில் நடந்த துக்ளக் பத்திரிகையின் பொன்விழாவில் மறைந்த சோவின் நெருங்கிய நண்பரான ரஜினி கலந்து கொண்டு பேசியபோது, “1971-ல் உடை இல்லாமல் இருக்கும் ராமன் சிலைக்கு செருப்பு மாலை போட்டு பெரியார் ஊர்வலம் சென்றார். அன்றைக்கு அதை யாரும் துணிந்து பத்திரிகையில் பிரசுரிக்கவில்லை. ஆனால், ‘சோ’ அதை அட்டைப்படத்தில் போட்டுக் கடுமையாகக் கண்டித்தார். அதனால், அப்போது முதல்வராக இருந்த கருணாநிதிக்கு சிக்கல் உருவானது. இதனால், துக்ளக் பத்திரிகையை சீஸ் செய்தார்கள். உடனே கொஞ்சமும் சளைக்காமல் மீண்டும் அச்சடித்து பிளாக்கில் புத்தகத்தை வெளியிட்டார். அப்புத்தகம் பிளாக்கில் அதிக விலைக்கு விற்பனையானது. அதன் மூலம் பத்திரிகை உலகில் சோ மிகவும் பிரபலமானார்’’என்று பேசினார். இந்த கருத்துக்கு பலர் ஆதரவாகவும், எதிர்ப்பாகவும் கருத்து தெரிவித்து வந்த நிலையில், ரஜினிகாந்த் இன்று தனது போயஸ்தோட்ட்டம் இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்தார். அதில் தான் பேசியதற்கு மன்னிப்பு கேட்க முடியாது என்று உறுதியாக கூறினார்.

ADVERTISEMENT


ADVERTISEMENT


இந்த நிலையில் பாஜகவின் மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி ரஜினியின் கருத்துக்கு ஆதரவாக தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அதில், பெரியார் குறித்த கருத்துக்கான வழக்கில் ரஜினி விரும்பினால் வாதாட தயாராக இருப்பதாக கூறியுள்ளார். மேலும், 1971 பேரணியின் போது ராமர், சீதை உருவச் சிலைகள் அவமரியாதை செய்யப்பட்டன என்றும் கூறியுள்ளார். இதனை சோ ராமசாமி துக்ளக் இதழில் பதிவிட்டுள்ளார். எனவே, நடிகர் ரஜினிகாந்த் தனது கருத்தில் உறுதியாக இருந்தால், தேவைப்பட்டால் ஒரு மாற்றத்திற்காக இம்முறை அவருக்கு நீதிமன்றத்தில் சட்ட ரீதியில் ஆதரவு அளிக்கத் தயாராக உள்ளேன் என்று தெரிவித்துள்ளார்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT