ADVERTISEMENT

பா.ஜ.க. முருகனுக்கு கடிவாளம் போடுங்கள்! மோடியிடம் வலியுறுத்த எடப்பாடி திட்டம்!!

01:57 PM Dec 20, 2020 | santhoshb@nakk…

ADVERTISEMENT

அ.தி.மு.க.- பா.ஜ.க. கூட்டணியை அமித்ஷா முன்னிலையில் ஓ.பி.எஸ்.ஸும் ஈ.பி.எஸ்.ஸும் அண்மையில் உறுதிப்படுத்தினர். ஆனால், கூட்டணிக் குறித்து எந்த கருத்தையும் சொல்லவில்லை அமித்ஷா. அதேசமயம், அ.தி.மு.க- பா.ஜ.க. கூட்டணித் தொடர்வதாக சமீப காலமாகச் சொல்லி வரும் தமிழக பா.ஜ.க. தலைவர் எல்.முருகன், கூட்டணிக்குள் குழப்பத்தை ஏற்படுத்தும் விதமாக பேசி வருவது அ.தி.மு.க. தலைவர்களுக்கு டென்சனை அதிகப்படுத்தியிருக்கிறது.

ADVERTISEMENT

பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்டங்களுக்கு நேற்று (19/12/2020) சென்ற பா.ஜ.க. முருகன், பா.ஜ.க. தலைமையில்தான் கூட்டணி; முதல்வர் வேட்பாளரை பா.ஜ.க.தான் அறிவிக்கும் என்று போகிற போக்கில் ஒரு குண்டை வீசியிருக்கிறார். முருகனின் இந்த பேச்சு முதல்வர் எடப்பாடி பழனிசாமி உள்பட அ.தி.மு.க. தலைவர்களை அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது.

இது குறித்து அ.தி.மு.க. மூத்த தலைவர்கள் சிலர் எடப்பாடியை தொடர்பு கொண்டு முருகனின் பேச்சுக்கு அதிருப்தியை தெரிவித்திருக்கிறார்கள். இந்த நிலையில், தங்களின் டெல்லி லாபி மூலமாக, 'முருகனின் வாய்க்கு கடிவாளம் போடுங்கள் அல்லது அ.தி.மு.க.- பா.ஜ.க. கூட்டணி இருக்கிறதா இல்லையா என தெளிவுப்படுத்தி விடுங்கள்' என பிரதமர் நரேந்திர மோடிக்கு தகவலை பாஸ் பண்ண எடப்பாடி திட்டமிடுவதாக அ.தி.மு.க. தரப்பில் பரவி வருகிறது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT