ADVERTISEMENT

ட்ரம்ப் வருவாரு கேள்வி கேட்பாருன்னு சொன்னீங்க... பாஜகவின் எச்.ராஜா மீண்டும் சர்ச்சை கருத்து!

02:45 PM Feb 26, 2020 | Anonymous (not verified)

கடந்த ஜனவரி 10- ஆம் தேதி முதல் நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்ட குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து தமிழகம் உட்பட நாட்டின் பல்வேறு பகுதிகளில் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதில் டெல்லியில் மிகத்தீவிர போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. ஷாஹீன் பாக் பகுதியில் கடந்த 70 நாட்களாக போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், சிஏஏ எதிர்ப்பாளர்களுக்கு எதிராக சிஏஏ ஆதரவாளர்களும் கடந்த ஞாயிற்றுக்கிழமை பேரணிகள் நடத்தினர். அதில் இரு தரப்பினருக்கும் இடையே வன்முறை ஏற்பட்டு வாகனங்கள் மற்றும் பொதுச்சொத்துக்கள் தீவைக்கப்பட்டன. டெல்லியில் ஏற்பட்ட வன்முறை காரணமாக டெல்லியில் அசாதாரண சூழ்நிலை நிலவி வருகிறது. பல்வேறு பகுதிகளில் துணை ராணுவ படையினர், டெல்லி காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். அதேபோல் டெல்லியில் மஜ்பூர், ஜாப்ராபாத், சந்த்பாக், கர்வால் நகர் ஆகிய இடங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் டெல்லி மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

ADVERTISEMENT



மேலும் இரண்டு நாள் அரசு முறை பயணமாக அமெரிக்கா அதிபர் டொனால்ட் ட்ரம்ப் இந்தியா வந்திருந்தார். அவருடன் ட்ரம்பின் மனைவி மெலனியா ட்ரம்ப், மகள் இவாங்கா ட்ரம்ப், மருமகன் ஜேரட் குஷ்னரும் வந்திருந்தனர். அகமதாபாத் மற்றும் டெல்லியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் அதிபர் ட்ரம்ப்பும், அவரது குடும்பத்தினரும் பங்கேற்றனர். குறிப்பாக உலக புகழ் பெற்ற தாஜ்மஹாலை சுமார் ஒன்றரை மணி நேரம் சுற்றிப் பார்த்தனர். அதேபோல் மகாத்மா காந்தியின் சபர்மதி ஆசிரமத்தை பார்வையிட்டனர். மேலும் டெல்லி ராஜ்கோட்டில் உள்ள காந்தியின் நினைவிடத்திற்கு சென்று மலர் தூவி மரியாதை செலுத்தினர். அதைத் தொடர்ந்து டெல்லியில் குடியசுத்தலைவர் மாளிகையில் நடந்த இரவு விருந்தில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மற்றும் மனைவி மெலனியா கலந்துக்கொண்டனர். அதன் பிறகு டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் அதிபர் ட்ரம்ப் மற்றும் அவரது குடும்பத்தினர் அமெரிக்கா புறப்பட்டனர்.

ADVERTISEMENT


இந்த நிலையில் அமெரிக்கா அதிபர் வருகை குறித்து பாஜகவின் தேசிய செயலாளர் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அதில், "அமெரிக்க ஜனாதிபதி வருவார். 370 ரத்து பற்றி கேட்பார், சிஏஏ பற்றி கேட்பார் என்றெல்லாம் செய்தி பரப்பிய ஊடகங்களின் முகத்தில் கரி" என்று குறிப்பிட்டு பதிவிட்டுள்ளார். பாஜகவின் எச்.ராஜா கருத்துக்கு சமூக வலைத்தளங்களில் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT