இந்தியாவில் கரோனா உறுதி செய்யப்பட்டோரின் எண்ணிக்கை 2,547-லிருந்து 2,902-ஆக அதிகரித்துள்ளது. அதேபோல் கரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோரின் எண்ணிக்கையும் 62 லிருந்து 68 ஆக உயர்ந்துள்ளது.மேலும் கரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 163 லிருந்து 184 ஆக அதிகரித்துள்ளது.அதிகபட்சமாக மகாராஷ்டிரா- 423, தமிழகம்- 411, டெல்லி- 386, கேரளா- 295, ராஜஸ்தான்- 179, உத்தரப்பிரதேசம்- 174, ஆந்திரா- 161, தெலங்கானா- 158, கர்நாடகா- 128, மத்திய பிரதேசம்- 104 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.இந்தத் தகவலை மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது.
உலகிலேயே சுகாதார வளர்ச்சியில்2வது இடம் வகிக்கும் இத்தாலியில் இறந்தவர்கள் எண்ணிக்கை 15000.உலகிலேயே மிக வளர்ந்த நாடான அமெரிக்காவில் இறந்தவர்கள் எண்ணிக்கை 7300.5ம் தேதி 130 கோடி மக்களும் வீட்டு வாசலில் விளக்கேற்ற சொல்வது நான் தனியாக வீட்டில் இல்லை என்னோடு நாடே உள்ளது என்ற உணர்விற்கு https://t.co/ga9lN7Ubfm
— H Raja (@HRajaBJP) April 4, 2020
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/85_9.jpg)
இந்த நிலையில் பாஜகவின் தேசிய செயலாளர் எச்.ராஜா தனது ட்விட்டர் பக்கத்தில் கரோனா வைரஸ் பரவல் குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.அதில், உலகிலேயே சுகாதார வளர்ச்சியில் 2-வது இடம் வகிக்கும் இத்தாலியில் இறந்தவர்கள் எண்ணிக்கை 15000. உலகிலேயே மிக வளர்ந்த நாடான அமெரிக்காவில் இறந்தவர்கள் எண்ணிக்கை 7300.5-ம் தேதி 130 கோடி மக்களும் வீட்டு வாசலில் விளக்கேற்றச் சொல்வது நான் தனியாக வீட்டில் இல்லை என்னோடு நாடே உள்ளது என்ற உணர்விற்கு என்றும்,தமிழகத்தில் நேற்று வரை கொரோனா தொற்று பாதித்தவர்கள் 411 இதில் 364 பேர் தப்லீக் ஜமாத் மாநாட்டில் கலந்து கொண்டவர்கள்.நாடு முழுவதும் பாதிக்கப்பட்டவர்கள் 2800 என்றும் குறிப்பிட்டுள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)