ADVERTISEMENT

பிரதமரின் தொகுதியில் கோட்டைவிட்ட பா.ஜ.க; வாரணாசியைப் பறித்த சமாஜ்வாதி!

06:02 PM Dec 07, 2020 | tarivazhagan

ADVERTISEMENT

ADVERTISEMENT

வாரணாசி உள்ளாட்சித் தேர்தலில், பத்தாண்டுகளில் முதல்முறையாக பா.ஜ.க இரண்டு தொகுதிகளில் தோல்வியடைந்துள்ளது.

லால் பீகாரி யாதவ்

உத்தரப்பிரதேச சட்டமன்ற மேலவைக்கான தேர்தல், டிசம்பர் 1ஆம் தேதி நடைபெற்றது. மொத்தமுள்ள 100 உறுப்பினர்களுக்கான இடங்களில் 38 இடங்கள் எம்.எல்.ஏ.க்களும் 36 இடங்கள் தேர்தல் மூலமும் 10 பேர் ஆளுநர் மூலமும் தேர்ந்தெடுக்கப்படுவர். மீதமுள்ள 16 இடங்கள் ஆசிரியர் மற்றும் பட்டதாரிகளுக்கான இடங்கள். இவற்றில் இரண்டு இடங்களில் சமாஜ்வாதி கட்சி வெற்றிபெற்று பா.ஜ.க.வுக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது.

அசுதோஷ் சின்கா

சமாஜ்வாதி வென்ற தொகுதி, பிரதமர் மோடியின் தொகுதியான பனாரஸுக்குள் வருவது என்பதுதான் பா.ஜ.க.வின் அதிர்ச்சிக்குக் காரணமாகும். அசுதோஷ் சின்காவும், லால் பீகாரி யாதவும் வெற்றிக் கொண்டாட்டத்தில் திளைத்து வருகின்றனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT