ADVERTISEMENT

நீங்க பிஜேபி கட்சியா அப்படினா வீட்டுக்கு வராதீங்க... பாஜகவை அதிர வைத்த மக்கள்... அதிர்ச்சியில் பாஜக!

01:43 PM Jan 07, 2020 | Anonymous (not verified)

2014, டிசம்பர் 31 ஆம் தேதிக்கு முன்னர் இந்தியா வந்தடைந்த வங்கதேசம், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளை சேர்ந்த இஸ்லாமியர் அல்லாதோருக்கு இந்திய குடியுரிமை வழங்கப்படும் வகையில் மத்திய அரசு புதிய சட்ட திருத்தத்தை கொண்டுவந்தது. இதனை எதிர்த்து நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தான் மக்களை தவறாக வழிநடத்துகிறது என பாஜக சார்பில் குற்றம்சாட்டப்படுகிறது. இதற்கு குடியுரிமை சட்டத்திற்கு எதிராக போராட்டம் நடத்துபவர்களைப் பற்றி பாஜகவினர் பல்வேறு கருத்துக்களை கூறிவருகின்றனர். குடியுரிமை சட்ட திருத்த மசோதாவிற்கு சிறுபான்மையினர் மத்தியில் அதிகமாக எதிர்ப்பு கிளம்பி வருகிறது.

ADVERTISEMENT


ADVERTISEMENT


அதே போல் கேரளா, மேற்கு வங்காளம் மற்றும் தமிழகம் ஆகிய மாநிலங்களில் அதிக மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். முக்கியமாக கேரளாவில் ஆளும் சிபிஎம் கட்சி மற்றும் எதிர்கட்சியான காங்கிரஸ் ஆகியோருமே இணைந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் கேரளாவில் பல்வேறு மாணவ அமைப்புகளும் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர்.இந்நிலையில் மாநில பாஜகவினர் குடியுரிமை சட்டம் குறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்துவதற்காக வீடு வீடாக சென்று விளக்கம் அளிக்க இருப்பதாக அறிவித்து இருந்தனர். கேரள பாஜகவும் இதுபோன்றதொரு அறிவிப்பை வெளியிட்டிருந்தது. இந்நிலையில் கேரளாவில் குடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் மக்கள் தங்கள் வீடுகளின் சுவரில் குடியுரிமை சட்டத்திற்கு எதிரான வாசகங்கள் எழுதிய போர்டுகளை பொருத்தியுள்ளனர். மேலும் அதில் 'குடியுரிமை சட்டம் குறித்து விளக்கம் அளிக்க ஆர்.எஸ்.எஸ் - பாஜக யாரும் உள்ளே வர வேண்டாம்' என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. இந்த நோட்டீஸால் பாஜகவினர் அதிருப்தியில் இருப்பதாக சொல்லப்படுகிறது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT