ADVERTISEMENT

உ.பி., பீகார் மக்களவை இடைத்தேர்தலில் பா.ஜ.க. படுதோல்வி!

07:03 PM Mar 14, 2018 | Anonymous (not verified)

உத்தரப்பிரதேசம் மற்றும் பீகார் மாநிலங்களில் நாடாளுமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் பா.ஜ.க. படுதோல்வி அடைந்துள்ளது.

ADVERTISEMENT

உத்தரப்பிரதேசத்தில் ஆட்சி அதிகாரத்திலும், பீகார் மாநிலத்தில் ஆட்சி அதிகாரத்தில் பங்கும் கொண்டுள்ளது பா.ஜ.க. உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் தொகுதியான கோரக்பூர், துணை முதல்வர் கேசவ் பிரசாத் மவுரியாவின் தொகுதியான பூல்பூர் மற்றும் பீகாரின் அராரியா ஆகிய நாடாளுமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் கடந்த மார்ச் 11ஆம் தேதி நடைபெற்றது.

ADVERTISEMENT

இந்தத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை தொடங்கியது. வாக்கு எண்ணிக்கையின் தொடக்கத்தில் பா.ஜ.க. முன்னிலையில் இருந்தது. ஆனால், அடுத்ததடுத்த கட்ட வாக்கு எண்ணிக்கையில் நிலைமை தலைகீழாக மாறியது. தற்போது மூன்று தொகுதிகளுக்குமான வாக்கு எண்ணிக்கை முழுமையாக நிறைவடைந்துள்ளது.

கோரக்பூர் தொகுதியில் சமாஜ்வாதி கட்சியின் பிரவீன் நிசாத் பா.ஜ.க.வின் உபேந்திர தத் சுக்லாவை 21,916 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். புல்பூர் தொகுதியில் சமாஜ்வாதி கட்சியின் நாகேந்திர சிங் படேல் பா.ஜ.க.வின் கஸ்லேந்திர சிங்கை 59,613 பீகாரின் அராரியா தொகுதியில் ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் சர்ஃபராஜ் அலாம் அவரை எதிர்த்துப் போட்டியிட்ட பா.ஜ.க.வின் பிரதீப் குமார் சிங்கை 57,358 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார்.

இந்தத் தோல்வி குறித்து பரிசீலனை செய்வோம் என்று கூறியுள்ள யோகி ஆதித்யநாத், சந்தர்ப்பவாத கூட்டணி என சமாஜ்வாதி மற்றும் பகுஜன் சமாஜ்வாதி குறித்து விமர்சனம் செய்துள்ளார். அதேசமயம், ‘சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ், பா.ஜ.க.வின் மக்கள்விரோதக் கொள்கைகளுக்கு மக்கள் தேர்தல் மூலம் பதிலளித்திருக்கிறார்கள்’ என தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT