barabanki incident

ஹரியானா மற்றும் பஞ்சாப் மாநிலங்களில் வேலை செய்துவந்த சுமார் 130 பீகார் மாநிலத் தொழிலாளர்கள், உத்தரப்பிரதேச மாநிலம் வழியாக நேற்று (27.07.2021) இரவு சொந்த ஊருக்குத் திரும்பியுள்ளனர். அப்போது பராபங்கி மாவட்டதில் அவர்கள் வந்த பேருந்து பழுதானது. இதனையடுத்து பழுதை சரிசெய்யும் பணி நடைபெற்றுள்ளது. இதற்கிடையே, பேருந்தில் ஏற்பட்ட பழுதை சரி செய்ய நேரமெடுக்கும் என்பதால், சிலர் பேருந்திற்கு முன்பாக சாலையில் படுத்து உறங்கியுள்ளனர்.

Advertisment

அப்போது வேகமாக வந்த டிரக் ஒன்று பேருந்தின் மீது மோதியுள்ளது. இதனால் பேருந்து முன்புறமாக நகர்ந்துள்ளது. இதில் பேருந்திற்கு முன்பாக படுத்திருந்த 18 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், காயமடைந்தவர்கள் அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்றுவருகிறது.

Advertisment

இதற்கிடையே உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ள பிரதமர் மோடி, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு 2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு 50 ஆயிரமும் நிவாரணமாக வழங்க உத்தரவிட்டுள்ளார்.