ADVERTISEMENT

“அண்ணாமலை அடிக்கடி நிரூபிக்கிறார்” - டிடிவி தினகரன் விமர்சனம்

06:01 PM Jun 13, 2023 | angeshwar

ADVERTISEMENT

ADVERTISEMENT

ஜெயலலிதா ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்டவர் என தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை பேசியதற்கு அதிமுக தரப்பு கொந்தளித்து வருகிறது. அதிமுகவின் அனைத்து அமைச்சர்களும் அண்ணாமலையை கடுமையாக விமர்சித்து வருகிறார்கள். தொடர்ந்து அவருக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்நிலையில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “அண்ணாமலை அரசியலுக்கு புதிது என்பதை அடிக்கடி நிரூபித்து வருகிறார். தமிழ்நாட்டு அரசியல் வரலாறு, ஜெயலலிதா எனும் ஆளுமை இதைப் பற்றியெல்லாம் தெரியாமல் அவர் ஏதோ வாய்க்கு வந்தபடி பேசி வருகிறார். திமுக 1991 மற்றும் 1996 ஆட்சிக்கு எதிராக 49 வழக்குகளை ஜெயலலிதா மீது போட்டார்கள். எல்லாவற்றையும் தவிடுபொடி ஆக்கினார். இந்திய அளவில் நடந்த சதியில் தான் ஜெயலலிதா தண்டிக்கப்பட்டார் என்பது எல்லாருக்கும் தெரியும்.

பாஜக தமிழ்நாட்டில் காலூன்றியதற்கு காரணமே ஜெயலலிதாதான் என்பதை அவர் மறந்து பேசுகிறார். வாய்பாயி, அத்வானி, மோடி ஆகியோர் ஜெயலலிதாவுடன் நட்புடன் பழகக் கூடியவர்கள். அன்னை தெரசா கூட ஜெயலலிதாவின் தொட்டில் குழந்தை திட்டத்தை பாராட்டி வீட்டிற்கெல்லாம் வந்துவிட்டு சென்றார். அதேபோல் பெண்கள் முன்னேற்றத்திற்காகவும், ஏழை எளியோர் வளர்ச்சிக்காகவும் மாணவர்கள், இளைஞர்கள் போன்றோரின் நலனுக்காகவும் பாடுபட்டவர். 69% இட ஒதுக்கீட்டை பெற்றுத்தந்தவர்.

அவரது 30 ஆண்டுகால அரசியல் வாழ்வில் அவரது வளர்ச்சியைக் கண்டு அஞ்சி காழ்ப்புணர்ச்சியால் போடப்பட்ட வழக்கு அது. ஜெயலலிதா மரணம் அடையும் வரை அவரை யாராலும் ஒன்றும் செய்ய முடியவில்லை. அவரைப் பற்றி அண்ணாமலை அறியாமையில் பேசுகிறார்” எனக் கூறினார்.


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT