ADVERTISEMENT

ஆந்திர மாநில கொள்ளையர்களை கைது செய்து ரூ.2 லட்சம் பறிமுதல்

05:26 PM Jan 08, 2020 | rajavel

ADVERTISEMENT

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் இருசக்கரவாகனத்தின் பெட்டியை உடைத்து ரூ2 லட்சம் திருடப்பட்டது தொடர்பாக ஆந்திர மாநில கொள்ளை கும்பலை காவலில் இருந்து எடுத்து சிதம்பரம் காவல்துறையினர் பணத்தை பறிமுதல் செய்தனர்.

ADVERTISEMENT



சிதம்பரம் அருகே உள்ள ஆதிவராகநல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் லோகநாதன். இவரது மனைவி கமலா. இவர்கள் இருவரும் கடந்த நவம்பர் மாதம் 8ம் தேதி சிதம்பரம் கீழவீதியில் உள்ள தனியார் வங்கி ஒன்றில் 2 லட்சம் பணத்தை எடுத்துக் கொண்டு சிதம்பரம் வேணுகோபால்பிள்ளை தெருவில் உள்ள ஒரு ஜவுளி கடையில் துணி எடுக்க சென்றனர்.

துணிகளை எடுத்துக் கொண்டு மீண்டும் திரும்பி வந்து பார்த்தபோது அவரது பைக்கில் இருந்த பெட்டி உடைக்கப்பட்டு அதிலிருந்த ரூ 2 லட்சம் திருடப்பட்டிருந்தது. இது குறித்து லோகநாதன் சிதம்பரம் நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் திருச்சி மணப்பாறை அருகே கடந்த நவம்பர் மாதம் 26ம் தேதி பணம் கொள்ளை வழக்கு சம்பந்தமாக ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம், நகரி தாலுகா, காவேரிபுரம் கிராமத்தைச் சேர்ந்த கோவிந்தசாமி மகன் சரவணன் (30), குமாரசாமி மகன் பாபு (45 ), ரவி மகன் மோகன் (27), வெங்கடாஜலம் மகன் ரமணா (31) ஆகிய 4 பேர் மீதும் காவல்துறை வழக்கு பதிவு செய்து கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.


அப்போது அவர்களிடம் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் சிதம்பரம், கும்பகோணம், தஞ்சாவூர் உள்பட பல பகுதிகளில் இருசக்கர வாகனங்களை குறி வைத்து அதன் பெட்டியை உடைத்து பணம் திருடியது தெரிய வந்தது.


இதுபற்றி தகவல் அறிந்த சிதம்பரம் நகர போலீஸ் இன்ஸ்பெக்டர் தேவேந்திரன்(பொறுப்பு), சப் இன்ஸ்பெக்டர் சுரேஷ்முருகன் மற்றும் காவல்துறையினர் திருச்சி மத்திய சிறையில் இருந்த 4 பேரையும் 2 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து நேற்று முன்தினம் இரவு விசாரணை நடத்தினர். அப்போது ஆதிவராகநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த லோகநாதனின் இருசக்கர வாகனத்தின் பெட்டியை உடைத்து அதிலிருந்த ரூ 2 லட்சம் பணத்தை திருடியது தெரிய வந்தது.

இவ்வாறு திருடிய பணத்தை சிதம்பரத்திலிருந்து புவனகிரி செல்லும் புறவழிச்சாலை பகுதியில் காலி மனை ஒன்றில் பள்ளம் தோண்டி பாலிதீன் பையில் வைத்திருந்ததும் விசாரணையில் தெரிய வந்தது. இதையெடுத்து காவல்துறை பணத்தை கைப்பற்றினர். மேலும் இவர்களுக்கு பல்வேறு கொள்ளை சம்பவங்களில் தொடர்பு உள்ளதா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT