சசிகுமார் நடித்த பிரம்மன் படத்தில் கதாநாயகியாக நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் லாவண்யா திரிபாதி. தயாரிப்பாளர் சி.வி. குமார் இயக்கிய மாயவன் படத்திலும் நடித்திருந்தார்.

உத்தர பிரதேசாம் மாநிலத்தை சேர்ந்த இவர், சினிமாவில் நடிகையாக அந்தால் ராக்சசி என்னும் தெலுங்கு படத்தின் மூலம் அறிமுகமானார். தமிழ், இந்தி, தெலுங்கு என்று பல மொழிகளில் நடித்து வருகிறார்.
ஹைதராபாத்திலுள்ள பஞ்சாரா ஹில்ஸ் பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி வசித்து வருகிறார். லாவண்யா தான் வாங்கும் 30 லட்சம் சம்பளத்திற்கு சில லட்சங்கள் ஜி.எஸ்.டி வரி ஏய்ப்பு செய்திருப்பதாக பரவிய தகவலின்படி அவரது வீட்டில் வருமான வரித்துறையினர் ரெய்டு நடத்தி இருக்கின்றனர். இந்த சோதனையில் சிக்கிய பொருட்கள் குறித்து யாரும் எதுவும் தெரிவிக்கவில்லை. மேலும் லாவண்யா அந்த சமயத்தில் ஷூட்டிங்கில் இருந்ததாகவும், தகவல் கிடைத்தவுடன் ஷூட்டிங்கை நிறுத்திவிட்டு வீட்டிற்கு திரும்பியிருக்கிறார்.
சோதனையில் கைப்பற்றப்பட்டப் பொருட்கள் பற்றிய விவரங்களை அவர்கள் தெரிவிக்கவில்லை. வீட்டில் சோதனை நடந்த போது, நடிகை லாவண்யா படப்பிடிப்பில் இருந்தார். அதை ரத்து செய்துவிட்டு வீட்டுக்கு வந்தார்.
நடிகை லாவண்யா வீடு மட்டும் அல்லாமல் தெலுங்கு திரையுலகின் நடிகை நடிகைகள் பலர் வீட்டில் ஐடி ரெய்டு கடந்த ஒரிரு தினங்களாக நடைபெற்று வருகிறது. அதில் மொத்தமாக 30 கோடி வரை வரி ஏய்ப்பு நடைபெற்றிருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.