ADVERTISEMENT

கூட்டணி கட்சிகள் தனிச் சின்னத்தில் போட்டியிட விரும்புவது ஏன்?

01:05 PM Mar 13, 2019 | rajavel

ADVERTISEMENT

திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 10 தொகுதிகள், விடுதலைச் சிறுத்தைகள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு தலா இரண்டு தொகுதிகள், இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக், இந்திய ஜனநாயக கட்சி, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி ஆகிய கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதிகள், மதிமுகவுக்கு ஒரு மக்களவைத் தொகுதி, ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவி என ஒதுக்கப்பட்டுள்ளது. திமுக 20 தொகுதிகளில் போட்டியிடுகிறது.

ADVERTISEMENT

காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளைத் தவிர, கூட்டணியில் உள்ள சிறிய கட்சிகள் திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்று திமுக வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து கட்சி நிர்வாகிகளுடன் பேசி முடிவு எடுக்கப்படும் என்று மதிமுக மற்றும் விடுதலைசிறுத்தைகள் கட்சிகள் தெரிவித்துள்ளது.



இந்த நிலையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பாக தேர்தல் ஆணையத்தில் மோதிரம் சின்னம் கேட்கப்பட்டது. ஆனால் தேர்தல் ஆணையம் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு மோதிரம் சின்னம் ஒதுக்கவில்லை. இதையடுத்து தேர்தல் ஆணையத்தில் வேறு சின்னம் கேட்டு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பாக மனு அளிக்கப்பட்டுள்ளது. இந்த தகவல் திமுகவுக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் திமுகவோ, உதயசூரியன் சின்னத்திலேயே போட்டியிட வலியுறுத்தியுள்ளது.

பிரதான கட்சியின் சின்னத்தில் போட்டியிட்டால் வெற்றி பெறலாம் என்று தெரிந்தும், தனிச் சின்னத்தில் போட்டியிட சிறிய கட்சிகள் விரும்புவது ஏன்? என்று விசாரித்தோம்.

ஒரு கட்சியின் உறுப்பினராகவோ, தலைவராகவோ இருப்பவர் வேறு கட்சியின் சின்னத்தில் தேர்தலில் போட்டியிட்ட வேண்டுமென்றால், ஏற்கனவே தான் உள்ள கட்சியில் உறுப்பினர் மற்றும் தலைவர் பதவியை விட்டு விலக வேண்டும். போட்டியிடும் சின்னத்தினுடைய கட்சியில் உறுப்பினராக சேர வேண்டும். இதற்காகவே தனிச்சின்னத்தில் போட்டியிட விரும்புவதாக சிறிய கட்சிகள் தெரிவிக்கின்றன என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT