/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/anna (1)_1.jpg)
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை மறுநாள் (21/09/2020) தி.மு.க. தோழமைக் கட்சிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெறும் என்று தி.மு.க. தலைமை அறிவித்துள்ளது.
சென்னையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் செப்டம்பர் 21- ஆம் தேதி அன்று காலை 10.30 மணிக்கு தி.மு.க. தோழமைக் கட்சிகள் ஆலோசிக்கின்றன.
விவசாயிகளுக்கு விரோதமான மத்திய அரசின் மசோதாக்கள் குறித்து தி.மு.க. தோழமைக்கட்சிகள் ஆலோசிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
விவசாயிகள் தொடர்பான மசோதாக்கள் மக்களவையில் ஏற்கனவே நிறைவேறிய நிலையில், நாளை மாநிலங்களவையில் நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியிருந்தது. இந்த நிலையில் தி.மு.க. தோழமைக் கட்சிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)